ஒரு நாள் முழுக்க பூட்டின கதவை திறக்கல… ஷூட்டிங் ஸ்பாட்டிலே ஜல்சா பண்ண ஜெய்!

Author: Shree
1 August 2023, 8:49 am

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக ஒரு ரவுண்ட் அடித்து வெற்றி நடிகராக பெயரெடுத்தவர் நடிகர் ஜெய். இவர் விஜய் நடித்த பகவதி படத்தில் அவருக்கு தம்பியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு சென்னை 600028, சுப்பிரமணியபுரம், சரோஜா, கோவா, எங்கேயும் எப்போதும், திருமணம் எனும் நிக்காஹ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து மார்கெட் பிடித்தார். இப்படியே போயிருந்தால் சார் வாழ்க்கையில் முன்னேறியிருப்பார்.

jai -updatenews360

ஆனால், வழிமாறி நடிகைகளின் வாசத்தை நுகர்ந்த இந்த நடிகர் அவருடன் நடித்த நடிகை அஞ்சலியை காதல் வலையில் வீழ்த்தி சில வருடம் ஒன்றாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து நடிகையை தன் கண்ட்ரோலில் வைத்திருந்தார். இப்படியே போனால் நம்ம வாழ்க்கை நாசமாகிடும் என எண்ணிய அந்த நடிகை அவரை பிரிந்து செல்ல உடனே நடிகர் ஜெய் வாணிபோஜனை தன் காதல் வலையில் வீழ்த்தினார். இவர்கள் இருவரும் தற்போது லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியாகி கிசுகிசுக்கப்படுகிறது. இது எத்தனை நாளைக்கோ? நடிகை வயிற்றில் குட்டி உருவாகாமல் இருந்தால் சரி தான் என ஏசுகிறார்கள் இணையவாசிகள். இந்த வதந்திகளுக்கு நடிகை வாணி போஜன் மறுப்பு தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்தார்.

ஜெய் குடிக்கு அடிமையாகி அஞ்சலியை மனரீதியாக மிகவும் டார்ச்சர் செய்துவந்துள்ளார். இதையெல்லாம் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காத ஜெய்யை எப்படியாவது திருத்த வேண்டும் என சினிமா தொழிலை கூட தூக்கி எறிந்துவிட்டு கணவன் மனைவியாக குடும்பம் நடத்தலாம் பின்னர் சொல்பேச்சு கேட்பார் என நம்பிய அஞ்சலி செய் உடன் சேர்ந்து திருவான்மியூர் பீச்சில் ரெண்டு பிளாட் வாங்கி வாழ்ந்து வந்துள்ளார்கள்.

அப்படியிருந்தும் ஜெய் குடி பழக்கத்தை விடவே இல்லையாம். இதனால் கார் விபத்துக்களால் கூட சிக்கி உயர் தப்பினார். இதையெல்லாம் பார்த்த அஞ்சலி இனிமேலும் இவருடன் வாழ்ந்தால் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிடும் என பயந்து அவரை உதறிவிட்டு தன் பங்கு வீட்டையும் விற்றுவிட்டு சென்றுவிட்டாராம். தற்போது ஜெய் அந்த பிளாட்டில் அவரது அப்பா உடன் இருக்கிறார் என்றும் பயில்வான் சில நாட்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

பிரபல பத்திரிகையாளர் வித்தகன் சேகர் ஜெய் – அஞ்சலியின் காதல் குறித்து பேசியுள்ளார். அதாவது இருவரும் சேர்ந்து பலூன் என்ற படத்தில் நடித்தபோது தனித்தனியே ஹோட்டலில் ரூம் கொடுத்தபோதும் ஜெய் அஞ்சலியின் ரூமிலே தான் இருப்பாராம். ஒரு நாள் முழுக்க ரூம் கதவை திறக்காமல் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே வரவில்லை. அதனால் அன்றைய படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாம்.

அதுமட்டும் அல்லாமல் கதையில் மாற்றம் செய்ய சொல்லி ஜெய் இயக்குனரிடம் கேட்டாராம். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்க அஞ்சலியை வயிறு வலி வந்தது போல் நடிக்க சொல்லி அவரை அங்கிருந்து தூக்கிட்டு போய்விட்டாராம். அதன் பின் இருவரும் திரும்ப வரவே இல்லையாம். இதனால் அன்றைய ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டு தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக வித்தகன் அந்த பேட்டியில் கூறியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

  • chiyaan vikram new movie title is maaveeran movie dialogue மாவீரன் பட வசனத்தை விக்ரம் படத்திற்கு அப்படியே டைட்டிலாக வைத்த இயக்குனர்?