பாவம் அந்த மனுஷன்.. இப்படி ‘ஃபீல்’ பண்ண வச்சிட்டீங்களே.. பெண் ரசிகைகளால் அசிங்கப்பட்ட ஜெய்..!
Author: Vignesh5 July 2023, 5:30 pm
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இளம் நடிகராக வளர்ந்து வந்தவர் ஜெய் இவர் விஜய்யின் பகவதி படத்தில் நடிக்க ஆரம்பித்து திரைத்துறையில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து சென்னை 600028 , சுப்ரமணியபுரம், சரோஜா, வாமனன், அவள் பெயர் தமிழரசி, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, திருமணம் எனும் நிக்காஹ் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த போது அவருடன் நடித்த நடிகை அஞ்சலியை காதலித்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்தார். அஞ்சலியை நடிக்க விடாமல் தன் கூடவே இருக்க சொல்லி அவரை மார்க்கெட் இழக்க செய்து அவரும் உருப்படியாக எந்த படங்களிலும் நடிக்காமல் குடிபோதைக்கு அடிமையாகினார். இதெல்லாம் ஒரு கட்டத்திற்கு மேல் தாங்கிக்கொள்ள முடியாத அஞ்சலி அவரை பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டார்.
இதனால் ஜெய் கோலிவுட்டில் பிளே பாய் நடிகராக கிசு கிசுக்கப்பட்டார். அதன் பின்னர் நடிகை வாணி போஜனுடன் நெருக்கம் ஏற்பட்டு அவரை காதலித்து அவருடனும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்ததாக பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் ஜெய் நடிப்பில் தீரக்காதல் படம் வெளியானது. ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அந்த வகையில் ஒரு பேட்டியில் தொகுப்பாளினி ஜெய்க்கு எவ்வளவு பெண் ரசிகைகள் என்று கேட்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அத்தனை பெண்களும் கையை தூக்காமல் இருந்துள்ளனர். இதனால் மொக்கை வாங்கி நிலையில், ஜெய் ஏமாற்றுத்துடன் முகம் வாடி இருந்துள்ளார். உடனே நெட்டிசன்கள் இதை வீடியோவாக பதிவிட்டு ஜெய்யை கலாய்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
Adeii😂😭 pic.twitter.com/499Q2COMDk
— Aryan (@Pokeamole_) July 4, 2023