தாறுமாறாக சம்பளம் கேட்கும் அனிருத்…அதிர்ச்சியில் ஜெயிலர் 2 படக்குழு…!

Author: Selvan
18 December 2024, 3:51 pm

ஏ.ஆர்.ரகுமானை மிஞ்சும் அனிருத் சம்பளம்

தற்போது இருக்கும் ட்ரெண்டுக்கு ஏற்ப தன்னுடைய இசையால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் அனிருத்.இவர் முதன்முதலில் தனுஷின் 3 படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகி மிகக் குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கு சென்றார்.

Anirudh's Upcoming movies

பல வித ஸ்டார் நடிகர்களுக்கு இவர் இசையமைத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இவருடைய அசுர வளர்ச்சியால் அடுத்தடுத்து படங்களுக்கு இசையமைத்து ரொம்ப பிஸியாக இருக்கிறார்.

தற்போது இவர் ரஜினி நடிக்கும் கூலி திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.இந்நிலையில் இவர் அடுத்து நெல்சன் இயக்கம் ஜெயிலர் 2 திரைப்படத்திற்கும் இசை அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்க: கவர்ச்சி நடிகை வீட்டினுள் விக்னேஷ் சிவன்…பகிரங்கமாக தாக்கிய பிஸ்மி..!

இதற்கிடையில் தன்னுடைய சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தியுள்ளார்.ஜெயிலர் 2 வில் 17 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.இவர் இதுக்கு முன்பு ஜெயிலர் 1 இல் வாங்கிய சம்பளத்தை விட பல மடங்கு அதிகம் என்பதால் படக்குழு தற்போது தீவிர யோசனையில் இறங்கியுள்ளது.

உலக முழுவதும் ரசிகர் பட்டாளத்தை தன்வசம் கொண்டிருக்கும் ஏ.ஆர்.ரஹுமானே ஒரு படத்துக்கு 8 கோடி சம்பளமாக வாங்கிவரும் நிலையில்,அனிருத்தின் சம்பளத்தை கேட்டு ஜெயிலர் 2 படக்குழு அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!