TRENDING NO1-ல் ஜெயிலர் 2…யூடியூப்பை தெறிக்கவிட்ட படத்தின் டீசர்..!
Author: Selvan15 January 2025, 4:44 pm
கொல மாஸில் தலைவர் ரஜினி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கும் ஜெயிலர்-2 படத்தில் நடிக்க இருக்கிறார்.நேற்று படத்தின் டைட்டில் டீசரை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
டீசர் வெளியான உடனே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.சில முக்கிய திரையரங்கின் திரையிலும் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது.
இதையும் படியுங்க: ரசிகர்ளுக்கு பொங்கல் பரிசு கொடுத்த லைக்கா…விடாமுயற்சி படத்தின் OTT-உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்…
தற்போது ஜெயிலர்-2 டீசர் யூடியூப்பில் ட்ரெண்டிங் NO1-ல் உள்ளது,4-நிமிடம் உள்ள இந்த டீசரில் நெல்சன் மற்றும் படத்தின் இசையமைப்பாளரான அனிருத் இருவரும் பேசிட்டு இருக்கும் போது,மிரட்டலான ஆக்ஷனில் ரஜினி தோன்றும் விதம் அனைவரையும் புல்லரிக்க வைத்தது.
ஜெயிலர் 1-ஐ போல இந்தப்படத்திலும் ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது.படத்தின் படப்பிடிப்பு வேலைகளை மார்ச் மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.மேலும் இந்த பாகத்தில் ரஜினியுடன் யார்,யார் நடிக்க இருக்கிறார்கள் என்ற அறிவிப்பை படக்குழு விரைவில் தெரிவிக்கும் என கூறப்படுகிறது.