‘அண்ணாத்த’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது அடுத்த 169வது படத்தில் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சனுடன் பணிபுரிகிறார். இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது. இப்படத்துக்கு ‘ஜெயிலர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் சென்னையில் துவங்கியது. சென்னை ஆதித்ய ராம் ஸ்டூடியோ, மகாபலிபுரத்தில் நடந்த முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து.
இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூர் மாவட்டத்தில் உள்ள அழகிய நத்தம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.
இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் இந்த படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகிறார்.
இந்நிலையில் முழு வீச்சில் நடைபெற்று வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகை ரம்யா கிருஷ்ணன் படப்பிடிப்பு BTS போட்டோ & வீடியோவை அண்மையில் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் படத்தின் GLIMPSE வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஸ்டைலிஷான நடை உடைகளோடு ரஜினி தோன்றுகிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் சூப்பர், மாஸ், தலைவருக்கு 71 வயசா யாரு சொன்னது என புகழ்ந்து வருகின்றனர்.
வழக்கு எண் 18/9, மாநகரம், இறுகப்பற்று போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் ஸ்ரீராம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று,…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் பஞ்சாயத்து உடையாபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையில்…
தமிழ்நாடு அரசின் விண்வெளி தொழில் கொள்கைக்கு நேற்று தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், கோபாலபுரம் குடும்பத்தின் தொழில்துறை கொள்கை…
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
This website uses cookies.