டூ பீஸ் உடையில் ரஜினியுடன் டூயட் ஆடி தெறிக்கவிட்ட தமன்னா – ஜெயிலர் பாடல் வீடியோ!
Author: Shree6 July 2023, 8:11 pm
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடித்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது.
தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. தற்போது படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் பாடல் #Kaavaalaa லிரிக் வீடியோ யூடியூப்பில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. இதில் தமன்னா டூபீஸ் உடையணிந்து கவர்ச்சி தெறிக்க ரஜினியுடன் டூயட் பாடியுள்ளார். இந்த பாடலில் ரஜினியின் ஸ்டைலான டான்ஸ் அவரது ரசிகர்களை செம குஷியாக்கியுள்ளது. இந்த பாடல் ஒரு மணி நேரத்திலே 2 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இதோ அந்த வீடியோ லிங்க்: