ரஜினியின் மருமகளுக்கு நடந்த ரகசிய திருமணம்.. இந்த தமிழ் ஹீரோவின் முன்னாள் மனைவியா ஜெயிலர் பட நாயகி..!

Author: Vignesh
18 August 2023, 12:30 pm

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், சுனில், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வந்தது.

rajini jailer

உலகம் முழுவதும் வெளியான ஜெயிலர் படத்திற்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் நாளில் மட்டும் ரூ.100 கோடி வரை வசூல் செய்ததாக தகவல் வெளியானது. அதுமட்டுமில்லாமல், படத்தை பார்த்தவர்கள் அனைவரும் பாஸிட்டிவ்வான ரிவ்யூ கொடுத்து வருவதால், மக்கள் குடும்பம் குடும்பமாக சென்று படத்தை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயிலர் திரைப்படம் வெளியான ஒரு வாரத்தில் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ.375.40 கோடியை கடந்துள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் போஸ்டரை பகிர்ந்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

mirna menon jailer-updatenews360

இந்நிலையில், ஜெய்லர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்னா மேனன் நடிப்பிற்கு தற்போது இணையதளத்தில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. அவரைப் பற்றி அதிகமான பதிவுகளையும் சமூக வலைதளத்தில் பார்க்க முடிகிறது.

mirna menon jailer-updatenews360

இதனிடையே, மிர்னா மேனன் இதற்கு முன்பு தமிழில் அதிதி மேனன் என்ற பெயரில் படங்களில் நடித்து இருந்ததாகவும், அப்போது நடிகர் அபி சரவணன் என்பவரை காதலித்து, ரகசியமாக திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாகவும், அவர்கள் விவாகரத்து வழக்கு சில வருடங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் பரபரப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

mirna menon jailer-updatenews360
  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 635

    0

    0