படம் சூப்பரா இருக்கா? சுமாரா இருக்கா? ஜெயிலர் படத்தின் ஆடியன்ஸ் Review!

Author: Shree
10 August 2023, 10:02 am

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் உலகம் முழுவதும் சுமார் 4000 அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை ரஜினியின் ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி வருகிறார்கள்.

முன்னதாக படத்தின் ட்ரைலர், பாடல் , ப்ரோமோ காட்சி என ஒவ்வொன்றும் சிறப்பாக இருந்ததோடு படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்தது. குறிப்பாக ரஜினி வயசானாலும் ஸ்டைலும் , அழகும் மாறாமல் இன்னும் அப்படியே இருப்பது ரசிகர்களுக்கு பேரின்பத்தை கொடுத்துள்ளது.

jailer

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதனிடையே ஜெயிலர் படம் எப்படி இருக்கு என ரஜினியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு நீங்கள் பார்த்து சொல்லுங்கள் என செம கூலாக பதிலளித்துவிட்டு இமயமலைக்கு ட்ரிப் அடித்துவிட்டார்.

jailer song

இங்கு தியேட்டர்கள் திருவிழா கோலமாக காட்சியளிக்கிறது. படம் நிச்சயம் சூப்பராக இருக்கும் என படம் பார்க்க குவிந்துள்ள ரஜினி ரசிகர்கள் கூறியுள்ளனர். வெளியான அனைத்து அப்டேட்களும் ரசிக்கும்படியாகவே இருப்பதால், ஜெயிலர் படம் நிச்சயமாக வெற்றியடையும் என்றும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதல் நாள் முன் பதிவில் மட்டும் ஜெயிலர் படம் பல கோடி வசூலித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே படம் நிச்சயம் வெற்றி அடையும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொடுத்துள்ளது.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 743

    0

    1