ஜப்பானில் சூப்பர்ஸ்டார்..அதிரடி ரிலீஸில் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படம்.!

Author: Selvan
20 February 2025, 2:36 pm

ஜப்பானில் ரிலீஸ் ஆகும் ‘ஜெயிலர்’ திரைப்படம்

ரஜினிகாந்த் நடிப்பில் மாஸ் ஹிட் அடித்த ஜெயிலர் திரைப்படம் நாளை ஜப்பானில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் மெகா வெற்றிபெற்று வசூலை வாரிக்குவித்தது.இப்படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யாகிருஷ்ணன்,யோகி பாபு,விநாயகன் என பலர் நடித்திருப்பார்கள்.

Rajinikanth Jailer Japan screening

மேலும் மோகன்லால்,சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் போன்றோர் கேமியோ ரோலில் நடித்து மிரட்டி இருப்பார்கள்.இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைடுத்து,இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழு திட்டமிட்டு,சமீபத்தில் அதற்கான ப்ரோமோவை வெளியிட்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதையும் படியுங்க: சம்பளத்தை பார்த்து கண்ணீர் விட்ட சிவாஜிகணேசன்… ரஜினிகாந்த் தான் காரணமா..!

இந்த நிலையில் தற்போது ஜெயிலர் முதல் பாகத்தை ஜப்பானில் நாளை {பெப்ரவரி 21}படக்குழு ரிலீஸ் செய்ய உள்ளது.ரஜினிகாந்த் சினிமா வாழ்க்கையில் அடியெடுத்து வைத்து 50 ஆண்டு முடிந்ததை கொண்டாடும் விதமாக,பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்படுகிறது.

சமீபத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்த மகாராஜா திரைப்படம் சீனாவில் வெளியாகி வசூலை குவித்த நிலையில்,தற்போது ஜெயிலர் படம் ஜப்பானில் வசூல் வேட்டையை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Salman Khan security issue என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!