கோடிகளை குவிக்கும் ஜெயிலர்… இதுதான் முதல்முறை ; தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட முக்கிய தகவல்..!!!

Author: Babu Lakshmanan
17 August 2023, 2:35 pm

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், சுனில், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வந்தது.

உலகம் முழுவதும் வெளியான ஜெயிலர் படத்திற்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் நாளில் மட்டும் ரூ.100 கோடி வரை வசூல் செய்ததாக தகவல் வெளியானது. அதுமட்டுமில்லாமல், படத்தை பார்த்தவர்கள் அனைவரும் பாஸிட்டிவ்வான ரிவ்யூ கொடுத்து வருவதால், மக்கள் குடும்பம் குடும்பமாக சென்று படத்தை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயிலர் திரைப்படம் வெளியான ஒரு வாரத்தில் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ.375.40 கோடியை கடந்துள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் போஸ்டரை பகிர்ந்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி