‘ஒரு நடிகையை பிடித்தால் படுக்கைக்கு அழைப்பேன்.. 10 பெண்களுடன் உடலுறவு..’ ஜெயிலர் வில்லன் விநாயகன் சர்ச்சை பேச்சு..!

Author: Rajesh
13 August 2023, 6:00 pm

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தற்போது சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர். பீஸ்ட் பட தோல்விக்கு பிறகு இப்படம் செம கம்பேக் ஆக அமைந்துள்ளது. ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் பலர் நடிப்பில் வெளியான இப்படம் திரையரங்குகளில் வெற்றி நடைபெற்று வருகிறது.

காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட் என கலந்த கலவையாக ஜெயிலர் திரைப்படம் அமைந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. ரஜினியின் ஸ்டைல், நெல்சனின் டார்க் காமெடி, அனிருத் இசை என பக்கா காம்போவாக அமைந்துள்ளது. பாசிட்டிவ் ரிவியூ பெற்று வரும் இத்திரைப்படம், இரண்டே நாட்களில் நூறு கோடி வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது.

குறிப்பாக இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அனைவராலும் புகழ்ந்து பேசப்பட்டு வருகிறது. ஒரே காட்சியில் ரஜினி, மோகன்லால், சிவராஜ்குமார் மிரட்டிவிட்டனர். படத்தின் ரீலிஸ்க்கு பின் மிரட்டல் வில்லனாக நடித்துள்ள நடிகர் விநாயகன் நடிப்பை பற்றி அதிகம் பேசப்படுகிறது.

மீடூ சர்ச்சையில் சிக்கி விமர்சனத்திற்குள்ளான நடிகர் விநாயகன், கடந்த ஆண்டு ஒரு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது மீடூ சர்ச்சையில் பேசப்பட்டது குறித்து கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த அவர், நான் இதுவரை 10க்கு மேற்பட்ட பெண்களுடன் உடலுறவு வைத்திருக்கிறேன்.

ஆனால் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. எனக்கு ஒரு நடிகையை பிடித்தால் படுக்கைக்கு அழைப்பேன் என கூறினார். இவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?