ரூ. 100 கோடி கொடுத்து ஜெயிலர் படத்தை வாங்கிய பிரபல நிறுவனம் – அதுமட்டும் இல்ல இன்னும் கேளுங்க!
Author: Shree25 August 2023, 7:56 pm
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், சுனில், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார், அண்ணாத்த படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்தனர். இதனால், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் வெளியான ஜெயிலர் படத்திற்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அனைத்து திரையரங்குகளும் ஃபுல் ஆன நிலையில், ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தியேட்டர்களில் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். ரஜினியின் பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்து, பட்டாசு வெடித்தும், மேள தாளங்களுடன் ஆட்டம், பாட்டமாக இருந்தனர்.
முதல் நாளில் மட்டும் ரூ.100 கோடி வரை வசூல் செய்ததாக தகவல் வெளியானது. அதுமட்டுமில்லாமல், படத்தை பார்த்தவர்கள் அனைவரும் பாஸிட்டிவ்வான ரிவ்யூ கொடுத்து மக்கள் குடும்பம் குடும்பமாக சென்று படத்தை பார்த்தனர். இதுவரை ஜெயிலர் படம் ரூ.525 கோடி வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் இப்படத்தை Netflix OTT தளம் ரூ. 100 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாம். வருகிற செப்டம்பர் மாதம் இப்படம் Netflix மற்றும் SunNxt என இரண்டு தளத்திலும் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கூறுகிறது. மேலும், இப்படத்தின் ஹிந்தி சாட்டிலைட் உரிமம் ரூ. 75 கோடிக்கு விலைபோனதாக கூறப்படுகிறது. இது ஜெயிலர் படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.