இணையதளத்தில் லீக்கான ஜெயிலர் பட காட்சிகள்… நடிகை தமன்னா பகிர்ந்த வீடியோ வைரல்…!!

Author: Babu Lakshmanan
25 February 2023, 11:34 am

பீஸ்ட்’ படத்தின் இயக்குனர், நெல்சன் திலீப் குமார் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை, சன் பிச்சர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. நெல்சன் திலீப்குமார் ரஜினியுடன் இணையும் முதல் படம் இதுவாகும்.

இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் தான் இசையமைத்து வருகிறார். ரஜினியின் பிறந்தநாளன்று வெளியான ஜெயிலர் படத்தின் தீம் மியூசிக் வேறலெவலில் ஹிட்டாகி இருந்தது, இதனால் இப்படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்கிற கேரக்டரில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 70 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார். மேலும், கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், தமன்னா, வஸந்த் ரவி, ரோபோ ஷங்கர், யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது. இதுதவிர கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவ ராஜ்குமாரும் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவர் ரஜினிக்கு வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடகா, மங்களூருவில் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜெயிலர் படப்பிடிப்பு தள வீடியோவை நடிகை தமன்னா தனது இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?