சிவகார்த்திகேயன் அப்பா உடன் வேலை செய்த அனுபவம் தான் ஜெயிலர்… உண்மை சம்பவம்!

Author: Shree
11 August 2023, 5:48 pm

தொடர் தோல்வியால் பீல்டவுட் ஆகவிருந்த சமயத்தில் நெல்சன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி மீண்டும் புத்துணர்ச்சியுடன் மார்க்கெட் பிடித்துள்ளார். ஆம் இன்று வெளியாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், சுனில், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தை தவிர, பிற மாநிலங்களில் அதிகாலை 6 மணிக்கு முதல் காட்சி வெளியானது. தொடர்ந்து, தமிழகத்தில் 9 மணிக்கு படம் ரிலீஸாகியுள்ளது. படம் வெளியானதால் தியேட்டரில் ரஜினிகாந்த் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், ஆட்டம், பாட்டத்துடன் படத்தை கொண்டாடி வருகின்றனர். படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வெளியாகி ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் திலீப்குமார் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்துள்ளது.

எதிர்பார்த்த லாபத்தை தாண்டி வசூல் ஈட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படம் சிவகார்த்திகேயனின் அப்பா உடன் ஜெய்லராக வேலைபார்த்த ஜி. ராமசந்திரன் என்பவர் தன்னுடைய பணி அனுபவத்தை குறித்து புத்தமாக எழுதி வெளியிட்டிருப்பார். அதன் கதை தான் ஜெயிலர் படம் என்று தற்போது பிரபல யூடியூபர் கூறியுள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ