தமிழ் சினிமாவில் என்னதான் பெரிய ஹீரோக்கள் வச்சி படம் எடுத்தாலும் அது தோல்வி அடைந்துவிட்டால் யாரும் இயக்குனரை பெரிதாக மதிக்கமாட்டார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் அண்மையில் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கு நடந்தது.
இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆன நெல்சன் கோலமாவு கோகிலா படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார் அந்த படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவின் பார்வை அவர் மீது விழுந்தது. இதையடுத்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கி பிளாக் பஸ்டர் கொடுத்தார்.
அதன் பின்னர் விஜய்யை வைத்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் பீஸ்ட் படத்தை இயக்கி பெரும் தோல்வியை கொடுத்தார். அதன் பின்னர் தற்போது ரஜினிகாந்த் வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். கட்டாயம் இப்படத்தை வெற்றிப்படமாக கொடுக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கிறார் நெல்சன்.
காரணம் பீஸ்ட் தோல்வியால் விருது விழாவில் பெருத்த அவமானத்தை சந்தித்தார்.இதனை அறிந்த ரஜினி நேரில் சென்று நெல்சனை சந்தித்து விருது விழாவில் நடந்த சம்பவத்தை குறித்து கேள்விப்பட்டேன். அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம். நானும் இப்படி நிறைய அவமானப்படுத்தப்பட்டிருக்கிறேன் என கூறி அவரது அனுபவங்களை எடுத்து சொல்லி நெல்சனை பூஸ்ட் செய்திருக்கிறார்.
எனவே ரஜினியும் நெல்சனுக்கு பேராதரவு கொடுத்துள்ளதால் நிச்சயம் இப்படம் வெற்றி அடையும். அதுமட்டும் அல்லாமல் இப்படத்தில் மோகன்லால், சுனில், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப் என மற்ற மொழி படங்களின் சூப்பர் ஸ்டார்கள் இணைந்துள்ளதால் இது நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகப்போகும் பான் இந்தியா படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. என பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.