என்ன மட்டும் இல்ல எங்க அம்மாவையும் சேர்த்து கூப்பிட்டான்.. ஜெயிலர் பட நடிகரின் உண்மை முகத்தை கிழித்த மாடல்..!

Author: Vignesh
16 August 2023, 7:00 pm

மலையாள திரைப்படத்தில் மிகவும் பிரபலமான நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் விநாயகன். இவர் பின்னணிப் பாடகர் மற்றும் இசையமைப்பாளராக இருந்து வருகிறார். தமிழில் கயல் படத்தின் ஹீரோவுக்கு நண்பராக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். அந்த படம் இவருக்கு நல்ல அடையாளத்தை தேடி கொடுத்தது.

அதையது தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தில் அவரது நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். மிரட்டலான அவரின் நடிப்பை பார்த்து கோலிவுட்டில் பல முன்னனி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அவரை புக் செய்ய காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

vinayagan-updatenews360

இப்படியான நேரத்தில் கடந்த சில நாட்களாக விநாயகன் குறித்த சர்ச்சையான விஷயம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. ஆம், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மீடூ சர்ச்சையில் சிக்கி விமர்சனத்திற்குள்ளான நடிகர் விநாயகன், கடந்த ஆண்டு ஒரு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

அப்போது மீடூ சர்ச்சையில் பேசப்பட்டது குறித்து கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த அவர், நான் இதுவரை 10க்கு மேற்பட்ட பெண்களுடன் உடலுறவு வைத்திருக்கிறேன். ஆனால், அவர்கள் யாரையும் நான் கட்டாயப்படுத்தி படுக்கைக்கு அழைக்கவில்லை. ஒரு நடிகையை எனக்கு பிடித்துவிட்டால் வெளிப்படையாக கூப்பிடுவேன் என கூறி அதிர்ச்சி அளித்தார். இந்த விஷயம் தற்போது மீண்டும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

vinayagan-updatenews360

இதனிடையே, சென்சேஷனல் நடிகராக வலம் வரும் விநாயகன் சினிமா வாழ்க்கை தாண்டி பல சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார். இதனிடையே, மாடல் அழகி மிருதுளா தேவி என்பவர் விநாயகன் மீது பரபரப்பு குற்றச்சாட்டை சுமர்த்தி இருந்தார். அதில், தன்னையும் தன்னுடைய அம்மாவையும், படுக்கைக்கு அழைத்ததாகவும், பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார் என்றும் புகார் அளித்திருந்தார். விசாரணையில் விநாயகமும் இதனை ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் சில வருடங்களுக்கு முன்பு நடந்திருந்தாலும், தற்போது ஜெய்லர் வெற்றியை தொடர்ந்து விநாயகம் குறித்த பழைய தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

  • Jyothika controversy in Bollywood web series ஜோதிகா நீங்களே இப்படி பண்ணலாமா…படு கேவலம்…முகம் சுளித்த ரசிகர்கள்.!