விஜய் டிவி நிகழ்ச்சியின் பிரபல தொகுப்பாளராக இருந்து வருகிறார் ஜாக்லின்.இவர் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கிறார்.அந்த வகையில் ஜாக்லின் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட பல சோக கதைகளை சமீபத்தில் பிக்பாஸ் எபிசோடில் கண்கலங்க பேசியிருந்தார் .
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் ஜாக்குலின் போட்டியாளராக அறிமுகமான போது பல எதிர்மறையான விமர்சனங்கள் வந்தது .அதிகமாக பேசிக்கொண்டே இருக்கிறார், எதற்கெடுத்தாலும் சண்டை போட்டு ஆர்ப்பாட்டம் செய்கிறார் என்றெல்லாம் சொன்னார்கள் . ஆனால் நாட்கள் செல்ல செல்ல இப்போது அவருக்கு ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்த சீசனில் டைட்டில் வெற்றி பெறுவதற்கு ஜாக்குலினுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கதை சொல்லும் டாஸ்கில் ஜாக்குலின் தன்னுடைய சோகமான கதையை பகிர்ந்தார் .
அதில் நான் விஜய் டிவியில் 10 வருடங்களாக பணியாற்றி வருகிறேன். என்னுடைய கதையை நான் எந்த இடத்திலும் சொன்னது கிடையாது. இதுதான் நான் என்னுடைய கதையை சொல்வதற்கு சரியான இடம் என்று நினைக்கிறேன். என்னுடைய வாழ்க்கை மிகவும் ஜாலியாக சென்று கொண்டிருந்த போது பெரிய இடி என்னுடைய வாழ்க்கையில் விழுந்தது அது என் வாழ்வில் நடந்த ஒரு மோசமான சம்பவம் .
எல்லோருக்கும் அவர்களுடைய அப்பாவின் நினைவு என்பது பல்வேறு விதமாக நினைவில் இருக்கும் . ஆனால் எனக்கு என்னுடைய அப்பாவின் நினைவு அவர் தூக்கு கயிற்றில் தொங்கியது தான் என்று கண் கலங்கியபடி பேச ஆரம்பித்தார். அப்பா இறந்த பிறகு என்னுடைய தாத்தாவிடம் எங்க அம்மா நிலத்தை கேட்டார்.ஆனால் அவர் என்னுடைய மகனே இல்லை என்று ஆன பிறகு உனக்கு எதுக்கு கொடுக்க வேண்டும் என்று சொன்னார். அப்போது அம்மா மனஉளைச்சலுக்கு ஆளாகி தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது நான் என்னுடைய தாத்தாவிடம் சண்டை போட்டு நிலத்தை வாங்கினேன் . இதைத் தொடர்ந்து என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவருக்கு பாலியல் ரீதியாக ஒருவர் தொல்லை கொடுத்தார் . அது எனக்கு தெரிய வந்தது .அதை வெளியே சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டினார்.
ஆனால் நான் தைரியமாக காவல் நிலையம் சென்று புகார் செய்தேன். ஆரம்பத்தில் என் அம்மாவை எல்லோரும் ஒதுக்கினார்கள் . அந்த நேரத்தில் எனக்கு பணம் சம்பாதிக்கிறது ஒன்றுதான் நோக்கமாக இருந்தது.
அப்போது தான் விமானத்தில் பணியாற்றும் பெண்ணாக வேலை கிடைத்தது . பிறகு விஜய் டிவி நடத்திய நீங்களும் ஆகலாம் விஜய் டிவி ஸ்டார் நிகழ்ச்சியில் பங்கு பெற்று தேர்வானேன் அதற்குப் பிறகு எனக்கு என் மீது நம்பிக்கை வந்தது. பிறகு வாழ்க்கையை பற்றிய தைரியமும் நம்பிக்கையும் வந்தது.
வாழ்க்கையில் உங்கள் முன்னால் தப்பு நடந்தால் தைரியமாக எதிர்த்து கேள்வி கேளுங்கள் என மோட்டிவேஷனல் ஆக பேசி இருந்தார்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.