உலகளவில் வசூல் வேட்டையில் ‘அவதார் 2’.. 3 நாட்களில் இத்தனை கோடியா..? 3-ஆம் பாகம் எடுப்பது உறுதி..!

Author: Vignesh
19 December 2022, 12:00 pm

பிரமாண்ட பொருட்செலவில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர், உலகம் முழுதும் 52 ஆயிரம் திரையரங்குகளில் இன்று வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் படத்தை வெளியிட விநியோக நிறுவனத்துடன் சில திரையரங்குகள் உடன்பாடு செய்த நிலையில் படம் அனைத்து பகுதிகளிலும் வெளியானது. டாப் ஹீரோக்களுக்கு போட்டியாக இந்தப்படம் ரிலீஸ் ஆனது.

avatar 2 updatenews360

2009-ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த “அவதார்” திரைப்படம், உலக சினிமாவில் அதுவரை இருந்த அத்தனை வசூல் சாதனைகளையும் முறியடித்து, 23 ஆயிரம் கோடிகளை குவித்து உலகில் அதிகம் வசூல் ஈட்டிய “அவதார்” படம் என்ற புதிய சாதனையைப் படைத்தது. இந்தியாவில் மட்டும் 100 கோடிகளைக் கடந்து வசூல் ஈட்டி சாதனை படைத்தது.

avatar 2 updatenews360

இரண்டாம் பாகமான “Avatar: The Way Of Water” 13 ஆண்டுகளுக்குப் பிறகு, அவதார் திரைப்படத்தின் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இரண்டாம் பாகத்தின் சிறப்பு முன்னோட்ட காட்சிகளை பார்த்தவர்கள், பிரம்மிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

avatar 2 updatenews360

160 மொழிகளில், உலகம் முழுதும் சுமார் 52 ஆயிரம் திரையரங்குகளில், வெளியாக உள்ளது “Avatar: The Way Of Water” திரைப்படம். இந்தியாவில் மட்டும் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் மூன்றாயிரம் திரையரங்குகளில் வெளியாகிறது.

avatar 2 updatenews360

முன்பதிவு தொடங்கிய நிலையில் இந்தியாவில் சுமார் 10 கோடிக்கு மேலாக டிக்கெட் விற்றுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி பிவிஆர் சினிமாவில் இரண்டாயிரத்து 500 ரூபாயும், என்.சி.ஆர் பகுதியில் 700 முதல் ஆயிரத்து 600 ரூபாய் வரையும் டிக்கெட் விற்பனையாவதாகவும், மும்பையில் 500 ரூபாய் முதல் ஆயிரம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

avatar 2 updatenews360

அறிவியல் புனைகதை வரிசையில், தோற்ற மெய்ம்மை எனப்படும் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில், 250 பில்லியன் செலவில் எடுக்கப்பட்டுள்ள அவதார் இரண்டாம் பாகமும், பல்வேறு சாதனைகளை நிகழ்த்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ‘அவதார் 2’ படம் வெளியாகிய மூன்று நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.133 கோடி வசூலித்து உள்ளது. இதில் விடுமுறை தினமான நேற்று மட்டும் இப்படம் ரூ.50 கோடியை வசூலித்து இருக்கிறது.

avatar 2 updatenews360 1

அதேபோல் உலகளவில் ‘அவதார் 2’ படம் மூன்று நாட்களில் ரூ.3 ஆயிரத்து 598 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இப்படம் விரைவில் அவதார் முதல் பாகத்தின் வசூலை முறியடித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

avatar 2 updatenews360 1

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அவதார் 2 படத்தின் வசூலைப் பொறுத்து தான் அதன் அடுத்த பாகத்தை வெளியிடுவது குறித்து முடிவு எடுப்பேன் என தெரிவித்திருந்தார். தற்போது அவர் எதிர்பார்த்தபடியே அவதார் 2 படத்தின் வசூல் விண்ணைமுட்டும் அளவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விரைவில் அவதார் மூன்றாம் பாகம் உருவாக அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

  • Captain Vijayakanth first death anniversaryகேப்டன் விஜயகாந்த் நினைவு நாள்…கண் கலங்கிய சினிமா பிரபலங்கள்..!
  • Views: - 621

    0

    0