டைட்டில் வின்னர் இவர் இல்லையா?.. அர்ச்சனாவை கடுமையாக விமர்சிக்கும் ஜேம்ஸ் வசந்தன்..!(வீடியோ)

Author: Vignesh
24 December 2023, 11:42 am

என்னதான் சினிமாவில் ஜெயித்து, பெயரெடுத்து, நிலைநாட்டி, மக்கள் மனதில் கொடி நாட்டினாலும், வெள்ளித்திரை நடிகர்களை விட சின்ன திரை நடிகர்கள், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள்.

முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியலுக்கு வருவார்கள், தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கதவைத் தட்டி வருகிறது. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்த VJ அர்ச்சனா. அவரது வில்லத்தனமான நடிப்பால் இல்லத்தரசிகள் அவர் மேல் செம கோபத்தில் உள்ளனர்.

archana ravichandran- updatenews360

ஆனால் நிஜத்தில் அவர் ஒரு VJ. சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது முரட்டு சிங்கிள், கலக்கல் ராஜா, கில்லாடி ராணி போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவ்வபோது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் அர்ச்சனா, தற்போது சூடான Expressions கொடுத்து மாடர்ன் உடை அணிந்து Photo ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதைப்பார்த்த ரசிகர்கள் வாயடைத்து இருப்பார்கள்.

bigg boss 7 tamil-updatenews360


இந்நிலையில், பிக் பாஸ் 7 நிகழ்ச்சி போட்டியாளராக ஐந்து பிரபலங்கள் உள்ளே வந்தனர். அதில், ஒருவர் தான் சின்னத்திரை நடிகை அர்ச்சனா பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து அனுப்பிய பின்னர் பொங்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் இந்த அர்ச்சனா.

இவர் வீட்டில் உள்ள அனைவரிடமும் சரிக்கு சமமாக நின்று சண்டை போட்ட காட்சி சமூக வலைதளங்களில் அனல் பறக்க ட்ரோல் மற்றும் மீம்ஸ் செய்யப்பட்டது. இப்படி ஒரு நிலையில், அர்ச்சனாவின் புகைபிடிக்கும் பழக்கம் குறித்த ஜேம்ஸ் வசந்தன் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

அதில், தவறான முன்மாதிரிகளுக்கு டைட்டில் வின்னர் பட்டம் கொடுக்க வேண்டாம் மற்றவர்களை விட விசித்ரா சிறந்தவராக இருக்கிறார். ஆகையால், அவருக்கு டைட்டில் வின்னர் கொடுக்கலாம். அத்துடன் புகை பிடிக்கும் பெண் என அர்ச்சனாவை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த காணொளி பலரின் கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளது. அர்ச்சனாவிற்கு சமூக வலைதளங்களில் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், இப்படி ஒரு காணொளி வெளியாகி ரசிகர்களை சிந்திக்க வைத்துள்ளது. மேலும், பிக் பாஸ் வீட்டிலுள்ள ஆண் போட்டியாளர்களை அழைத்து சென்று அர்ச்சனா புகை பிடிப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 396

    0

    0