எத்தனை நாளைக்கு உன் பொழப்பு ஓடும்? இளையராஜாவை தொடர்ந்து அனிருத்தை விமர்சித்த பிரபலம்!
Author: Shree9 May 2023, 6:14 pm
தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தமிழ் மக்களுக்கு பேமஸ் ஆனவர் கேம்ஸ் வசந்த். இவர் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் ஊக்கமளிக்கும் பேச்சாளராக மக்களிடையே பேமஸ் ஆனார். 2008 ஆம் ஆண்டில் தமிழ் திரைப்படத் துறையில் திரைப்பட இசையமைப்பாளராகவும், 2015 இல் திரைப்படத் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகும் முன், சன் டிவி மற்றும் விஜய் டிவி போன்ற பிரபலமான தமிழ் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார்.
சுப்பிரமணியபுரம், பசங்க, நாணயம், யாதுமாகி, ஈசன், புத்தகம் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் அண்மையில் இசைஞானி இளையராஜா குறித்து இசையமைப்பாளரின் இசையை குறித்து மணிக்கணக்காக பெருமையாக பேசுவேன். ஆனால் ஒரு மனிதனாக மகா மட்டமானவர். ஆன்மீகதிற்குள் நிறைய விஷயத்தை பேசும் இளையராஜாவுக்கு பெருந்தன்மை, முதிர்ச்சி, சகிப்பு தன்மை , பொறுமை , புரிந்துக்கொள்ளுதல் இது எதுவுமே அவருக்கு கிடையாது. ஆன்மீகத்திற்கு உள்ளே போகிறேன் என சொல்லிவிட்டு வெளியில் அசிங்கமாக பேசுவது நல்லா இல்லை என்று கூறினார். அவரின் அந்த பேச்சுக்கு பலரும் ஆதரவு குரல் கொடுத்தனர்.
அதையடுத்து தற்போது இளையராஜாவை தொடர்ந்து இளம் இசையமைப்பாளர் அனிருத்தையும் விமர்சித்துள்ளார். அதாவது, இமான் சிறந்த இசையமைப்பாளர் தான். அவருடைய பலமே மெலோடி இசையை கொடுப்பதுதான். அதே சமயம் ரசிகர்களுக்கு தேவையான அனைத்தையும் தன்னுடைய இசையால் அவர் விருந்து அனைத்தையும் வருகிறார்.
ஆனால், அனிருத் அப்படி கிடையாது. அவருடைய இசை முழுவதும் அதிரடி இசையாக இருக்கிறது. வேறு இசைகளில் அவர் அதிக கவனம் செலுத்தவில்லை. ரசிகர்ளுக்கு பிடித்திருக்கிறது என்பதற்காக அவர் தகுதியற்றவராக கன்னாபின்னனு இசையமைக்கிறார். அவருடைய நோக்கமே ரசிகர்களை கவர்வதாக தான் இருக்கிறது. குத்து பாட்டுகளுக்கு மட்டுமே அனிருத் இசைக்கிறார். இதை கொண்டு எத்தனை நாட்கள் அவர் ஓட்ட முடியும்?’
பிரியாணியை ஒரு முறை சாப்பிட்டால் தான் நன்றாக இருக்கும். தொடர்ந்து அதை சாப்பிட்டால் எப்படி இருக்கும்? ரசிகர்கள் ராக் மியூசிக் மட்டும் விரும்புவதால் தொடர்ந்து அதையே கொடுத்து வருகிறார். இதற்கு தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தலை சாய்ப்பதால் தான் அவருக்கு வேறு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. இதை அவருக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தனக்கு எது வருகிறதோ அதை மட்டுமே வெளிக்காட்டுகிறார். ஒரு நல்ல திறமையான இசையமைப்பாளர்களுக்கு இது அழகு அல்ல. இசையமைப்பாளர் என்பவர் ஒரு படத்தின் கதைக்கு என்ன தேவையோ, அந்த இடத்திற்கு ஏற்றவாறு இசையமைத்துக் கொடுக்க வேண்டும்.
ராக் மியூசிக் மட்டும் படத்தின் சிறந்த இசை என்று சொல்லிட முடியாது. அந்த படத்திற்கு தேவையான மெலோடி, குத்து பாட்டு, பிஜிஎம் போன்ற பல விஷயங்கள் இருக்க வேண்டும். அது இருந்தால் தான் அந்த இசை சிறந்த இசையாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். இதனை அனிருத் ரசிகர்ககளால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. யார் சொன்னது அனிருத் மெலோடி பாடல்களை கொடுக்கவில்லை என்று.?
” கண்ணழகா… காலழகா… · : உயிரே உயிரே உனைவிட எதுவும்” ,
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீளம் கூட வானில் இல்லை
போ (போ) இன்று நீயாக (நீயாக)
வா நாளை நாமாக (நாமாக)
உன்னப் பாக்காமலே
ஒன்னும் பேசாமலே
போதுமா இன்னும் வேணுமா? மண்டை பத்திரம் என ஜேம்ஸ் வசந்த்தை எச்சரித்துள்ளனர் அனிருத் ரசிகர்கள்.