தேவா சொல்லுவது பொய்..COPY RIGHTS உண்மையை உடைத்த ஜேம்ஸ் வசந்த்.!

Author: Selvan
15 February 2025, 8:08 pm

தேவாவை தாக்கிய ஜேம்ஸ் வசந்த்

சமீப நாட்களாக இளையராஜாவின் COPY RIGHTS பிரச்சனை பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது,பலரும் இதைப்பற்றி தங்களுடைய கருத்துக்களை சோசியல் மீடியாவில் தெரிவித்து வரும் நிலையில்,இசையமைப்பாளரும் நிகழ்ச்சி தொகுப்பளருமான ஜேம்ஸ் வசந்த COPY RIGHTS பற்றி பல உண்மைகளை உடைத்து பேசியுள்ளார்.

இதையும் படியுங்க: பாதி சம்பளத்தை ஆட்டைய போட்டுறாங்க…அமரன் வெற்றி விழாவில் SK ஓபன் டாக்.!

சமீபத்தில் இசையமைப்பாளர் தேவா,என்னுடைய பாடல்களுக்கு நான் காப்பி ரைட் கேட்கமாட்டேன் என்றும்,என்னுடைய பாடல்களை மீண்டும் திரையில் வந்தால் அதை தற்போதுள்ள இளைஞர்கள் கொண்டாடி,யார் இந்த தேவா என்று என் பாடல்களை தேடி கேட்கின்றனர்,எனக்கு அந்த புகழ் போதும் என பேசியிருந்தார்,இதனால் பலரும் இளையராஜாவை தேவாவிடம் இருந்து கத்துக்கோங்க என கூறி வந்தனர்.

Deva vs Ilaiyaraaja copyright debate

தற்போது ஜேம்ஸ் வசந்த் தன்னுடைய facebook பக்கத்தில் தேவா கூறிய கருத்தை எதிர்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் தேவா சொன்னது முழுவதும் பொய்,இந்தியாவில் உள்ள எல்லா இசையமைப்பாளர்களும் IPRS உறுப்பினர்கள் தான்,இதில் யார் யார் இருக்கிறாரகள் என்பதை நீங்களே பார்க்கலாம்,தேவாவும் அதில் உள்ளார்,இதில் உறுப்பினராக இணைந்துவிட்டால்,நம்முடைய பாடல் வெளியான பிறகு,அதை ரசிகர்கள் கேட்க கேட்க அதற்கான தொகை அந்த இணையத்தில் சேர்ந்து வரும்,ஒவ்வொரு மாதமும் அந்தெந்த இசையமைப்பாளர்களுக்கான தொகையை அவர்கள் அனுப்பி வைத்து விடுவார்கள்.

இப்படி தான் எனக்கும் பணம் வருது,எல்லோருக்கும் இதே மாதிரி தான்,அப்படி இருக்கையில் இளையராஜாவை மட்டம் தட்டி,தேவாவை புகழ்ந்து வருவதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என ஜேம்ஸ் வசந்த் கூறியுள்ளார்.

  • sachein movie re release box office collection report சோடி போட்டு பாப்போமா சோடி- ரீரிலீஸிலும் அஜித்தை முட்டி மோதும் விஜய்? இவ்வளவு கலெக்சனா?