ஜனநாயகன் படத்துக்கு பிரச்சனையா? விஜய் அரசியலால் புது சிக்கல்!
Author: Udayachandran RadhaKrishnan24 March 2025, 3:49 pm
விஜய் நடிக்கும் கடைசி படம் ஜனநாயகன். ஹெச் வினோத் இயக்கத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி மற்றும் பலர் நடிக்க உள்ள இந்த படம் விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க : ஜனநாயகன் படத்தின் மாஸ் அப்டேட்.. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
இதனால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த வருட கடைசியில் இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை ஜனநாயகன் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டது.

அதன்படி தயாரிப்பு நிறுவனமான KVN தயாரிப்பு நிறுவனம் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது. அதில் இன்று மாலை 6 மணிக்கு அப்டேட் என குறிப்பிட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.
Indha …… namakku super collection ma 🔥
— KVN Productions (@KvnProductions) March 24, 2025
Stay Tuned, 3 hours to go!#JanaNayagan #ஜனநாயகன் pic.twitter.com/ZPr2MIHaRM
அதே சமயம் இந்த வருட இறுதியில் படம் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையல், படத்தின் ரிலீஸை பொங்கலுக்கு தள்ளிவைத்துள்ளனர். விஜய் தீவிர அரசியலில் இறங்கியள்ளதால் இந்த மாற்றமா அல்லது அரசியல் காரணங்கள் ஜனநாயகன் படத்துக்கு பிரச்சனையா என சந்தேகம் எழுந்துள்ளது.