30 வருஷமா கமலை ஒதுக்கி வரும் ஜனகராஜ்.. டப்பிங்கில் நடந்த அந்த சம்பவம் தான் காரணமாம்..!

Author: Vignesh
3 January 2024, 3:45 pm

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகரான ஜனகராஜ் 80க்களில் பிஸியான மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்துக்கொண்டிருந்தார். தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் நடித்த மக்கள் மாதத்தில் மிகப்பெரிய இடத்தை பிடித்த இவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர்களான கவுண்டமணி செந்தில் ஜோடிக்கு பெரும் போட்டியாக இருந்தார். அந்த நேரத்தில் எதிர்பாராமல் அவரது முகம் விபத்துக்குள்ளாகி முக வாதம் நோயால் பாதிக்கப்பட்டது. இதனால் வாய் கோணையாகிவிட்டது. இதை பார்த்து பலரும் ” இந்த மூஞ்சியை வச்சிட்டு எப்புடி இனிமே படங்களில் நடிப்ப? என கிண்டலடித்தார்களாம்.

அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து முயற்சித்து திரைப்படங்களில் நடித்த அவர் கொஞ்சம் இழுத்து.. இழுத்து பேசி தனக்கென ஒரு தனி மாடுலேஷனையும், பாடி லாங்குவேஜையும் வரவைத்துக்கொண்டார். அதற்கு இன்னும் வரவேற்புகள் அதிகமாக கிடைத்தது. இதனால் கேப் இல்லாமல் நடிக்கும் அளவிற்கு படவாய்ப்புகள் குவிந்தது.

இருந்தாலும் அவ்வப்போது அதை நினைத்து வருந்தவாரம். சில வருடங்களில் அவரால் நடிக்க முடியாமல் போனதாம். இதை கவனித்த இயக்குனர் பாரதிராஜா அவரை பார்த்துக்கொள்ள தனது உதவி இயக்குனர் ஒருவரை அனுப்பினாராம். அவர் ஸ்க்ரிப்ட் மற்றும் ஷூட்டிங்கில் வேலை செய்ததை விட கனகராஜுக்கு உதவி செய்தது தான் அதிகமாம். அந்த உதவி இயக்குனர் வேறு யாரும் அல்ல நடிகர் மனோபாலா தான்.

இதனிடையே, வயது முதிர்ச்சி அடைய அவரால் நோயில் இருந்து மீள முடியாமல் தவித்துள்ளார். பின்னர் ஜனகராஜுன் முக வாதத்திற்கு கரண்ட் வைத்து ஷாக் டிரீட்மென்ட் கொடுத்ததால் நரம்பு பிரச்சனை, மெமரி லாஸ் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்ப்போது ஜனகராஜின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பல ஆண்டுகள் உடல்நல குறைவால் சினிமாவில் நடிக்காமல் இருந்த ஜனகராஜ் 96 படத்தில் பள்ளி வாட்ச்மேன் ஆக நடித்திருந்தார். ரஜினிகாந்த், கமலஹாசன் படத்தில் அதிகமாக நடித்து வந்த ஜனகராஜ் ஒரு கட்டத்தில் கமலுடன் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார்.

janagaraj

கடைசியாக ஜனகராஜ் குணா படத்தில் தான் கமலுடன் நடித்திருந்தார். அப்படத்தில், இயக்குனருடன் ஏற்பட்ட சண்டை தான் கமலஹாசனை கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேல் ஒதுக்கி வைத்திருந்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது, குணா படத்தினை இயக்கிய சந்தான பாரதி டப்பிங் போது ஜனகராஜ் பேசியது பிடிக்காமல் போக மறுபடியும் பேசு என்று சந்தான பாரதி சொல்ல மீண்டும் பேசியிருக்கிறார் ஜனகராஜ்.

janagaraj

அதுவும், சரியாக இல்லை என்று மீண்டும் பேசு என்று சந்தான பாரதி கூறியிருக்கிறார். இதனால், கோபமடைந்த ஜனகராஜ் இருவரும் விளையாட்டாக பேசியபோது சண்டையில் முடிந்ததால், அந்த அறையில் இருந்து கோபத்துடன் வெளியேறியுள்ளார். தான் நடிப்பது நன்றாக இல்லை என்று இயக்குனர் மீண்டும் சொன்ன காரணத்தினால் கோபப்பட்ட ஜனகராஜ் அதன் பின் கமலஹாசன் படத்தில் நடிப்பதையே நிறுத்திவிட்டாராம். இதே போல் சூட்டிங் ஸ்பாட்டில் கூட மற்ற இயக்குனர்களிடம் சண்டை போட்டு உள்ளாராம் ஜனகராஜ்.

  • Arun and Archana in Bigg Boss Houseரொமாண்டிக் ஆக மாறிய பிக் பாஸ் வீடு.. அருணை கட்டிப்பிடித்து அழுத அர்ச்சனா!
  • Views: - 349

    0

    0