அரைநிர்வாணமாக ஓணம் கொண்டாடிய பிக்பாஸ் பிரபலம்.. பப்பி ஷேம் புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
Author: Vignesh29 August 2023, 2:28 pm
பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் நடிகர் நடிகைகள் பேமஸானாலும் சில சர்ச்சுகளில் சிக்குவது வாடிக்கையாகி தான் உள்ளது அந்த வகையில் மோகன்லால் தொகுத்து வழங்கிய மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி நாலாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் பேமஸ் ஆனவர் தான் ஜானகி சுதிர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இவர் சர்ச்சைக்குரிய போட்டியாளராக வலம் வந்தார். அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படமும் சர்ச்சைக்குரிய படமாகவே இவருக்கு அமைந்தது. இவர் நடித்த ஹோலி வுண்டு திரைப்படம் கடந்த ஆண்டு நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது.
இந்த படம் ஓரினச்சேர்க்கையாளரை பற்றி எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் கன்னியாஸ்திரி பெண் ஓரினச் சேர்க்கையாளராக காட்டப்பட்டது தான் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதற்கு பல எதிர்ப்பு கிளம்பிய போதும் அதனை மீறி ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது.
இதனிடையே, கடந்தாண்டு ஓணம் பண்டிகையின் போது நடிகை ஜனனி சுதீர் நடத்திய அரைநிர்வாணமாக போட்டோஷூட் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் பக்கத்தில் வைரலாகி வருகிறது.