போடு தகிட தகிட தா… தளபதி 68ல் விஜய்க்கு தங்கையாக நடிக்கபோகுவது இந்த பிரபல நடிகையா?

Author: Shree
28 October 2023, 12:16 pm

நடிகர் விஜய் லியோ படத்தை முடித்த கையோடு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி 68’ படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் வேலைகள் தற்போது மும்முரமாக தயாராகி உள்ளது. இந்நிலையில் இன்று பூஜையுடன் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் உடன், நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல், நடிகைகள் மீனாக்‌ஷி சவுத்ரி, சினேகா, லைலா மற்றும் வெங்கட் பிரபுவின் ஆஸ்த்தான நடிகர்களான தம்பி பிரேம்ஜி முதல் ஒட்டுமொத்த வெங்கட்பிரபுவின் கேங்கும் இணைந்துள்ளது.

மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமும் ஒன்றுகூட பூஜை செய்த வீடியோவை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் வெளியிட்டுள்ளது. பல வருடங்களுக்கு விஜய்யின் தளபதி 68 படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக இணைந்துள்ளார். இப்படத்தில் நடிக்க விஜய் ரூ. 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். அண்மையில் இந்த படத்தின் பூஜை வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மீண்டும் விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவதில் செம ஹேப்பி என அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார். எனவே இன்று முதல் படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி விஜய் ரசிகர்களை அடுத்தடுத்து மகிழ்ச்சி படுத்தும் என நம்பலாம். இப்படத்திற்காக விஜய் பீல்டவுட் ஆன நட்சத்திரங்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களுக்கு மீண்டும் ஒரு வாழ்க்கையை கொடுத்துள்ளார். ஆம், குறிப்பாக நடிகர் பிரசாந்த், நடிகர் அஜ்மல் அமீர், நடிகை லைலா, நடிகை சினேகா உள்ளிட்ட பிரபலங்களுக்கு தளபதி 68 படத்தின் மூலம் மீண்டும் ஒரு வாழ்க்கை உருவாகவுள்ளது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் மீண்டும் ஒரு பிரபல நடிகை இணைந்துள்ளார். ஆம், தெகிடி பட புகழ் ஜனனி ஐயர் இப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடிக்க கமிட்டாகியுள்ளாராம். இந்த தகவல் தற்போது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!