கட்டிபுடிச்சி பண்ணுங்க கவலையெல்லாம் போயிடும்… ஏடாகூடனமான கேள்விக்கு எக்குத்தப்பான பதில்!
Author: Shree24 September 2023, 5:43 pm
ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார். இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார்.
ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். ஜான்வி கபூர் தொடர்ந்து இந்தி படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இதனிடையே தென்னிந்திய மொழி இயக்குனர்கள் பலர் ஜானியை இக்கட தேசத்தில் இறக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஜான்வியும் அதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஜான்வி கபூரிடம் ஒருவர், சில நேரங்களில் ரொம்ப கவலையாக இருக்கிறது. கவலை மறக்க ஏதாவது வழி சொல்லுங்களேன் என கேட்டதற்கு, ஒரே வழி ” தலையணை கட்டிப்பிடிச்சு சோகமான பாடல்களை பாடுங்கள் கவலைகளெல்லாம் மறந்துவிடும் என கூறினார். மற்றொருவர், ” உங்களுக்கு முத்தம் கொடுக்கவேண்டும் முடியுமா? என்று கேட்டார். அதற்கு முடியாது என கூறி மறுத்துவிட்டார்.