கையில் அந்த பொருளுடன் ஏர்போர்ட்டுக்கு வந்த ஜான்வி கபூர்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

Author: Vignesh
24 May 2023, 7:00 pm

ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார்.

இதனிடையே, ஸ்ரீதேவியின் மகள் நடிகை ஜான்வி கபூர் தற்போது இந்திய அளவில் பாப்புலராக இருந்து வரும் இளம் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ஜான்வி கபூர் தற்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் தேவரா படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் இவர் எப்போது தமிழில் நடிப்பார் என்று தான் அவரது தமிழ் ரசிகர்கள் நீண்ட காலமாக தவமாய் தவம் இருந்து காத்திருக்கிறார்கள்.

janhvi kapoor-updatenews360

முன்னதாக ஜான்வி கபூர் வெளியில் வந்தாலே அவரின் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படு வைரல் ஆகிவிடும். அந்த வகையில், தற்போது நடிகை ஜான்வி கபூர் ஏர்போர்ட்டுக்கு கையில் தலையணை உடன் வந்திறங்கி இருக்கும் வீடியோ படு வைரல் ஆகி இருக்கிறது.

அதில், நீங்க ப்ளைட்டில் போறிங்க, ரயிலில் இல்லை’ என நெட்டிசன்கள் நடிகை ஜான்வி கபூரை சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…