ஜான்வி கபூர் 1997ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 7ஆம் நாள் இந்திய நடிகை ஸ்ரீதேவி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார்.
இவருக்கு குஷி கபூர் என்ற ஒரு இளைய சகோதரி மேலும் அர்ஜுன் கபூர் மற்றும் அன்சுலா கபூர் என இரு ஒன்றுவிட்ட உடன்பிறப்புகள் உள்ளனர். ஜான்வி கபூர் நடிகர் அனில் கபூர் மற்றும் சஞ்சய் கபூர் அவர்களின் உறவினர் ஆவார்.
இவர் தன் பள்ளிப் படிப்பை மும்பையில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் பயின்றார். இந்தி திரைப்பட துறைக்கு வரும் முன்பே இவர் கலிபோர்னியாவில் உள்ள லீ ஸ்டார்பெர்க் திரையரங்கு மற்றும் சினிமா நிறுவனத்தில் நடிப்புக்கான படிப்பை மேற்கொண்டார்.
ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார். இன்ஸ்டாகிராமில் 21 மில்லியன் ரசிகர்கள் ஜான்வி கபூரை பின்தொடர்கின்றனர்.
இந்நிலையில், ஜான்வி கபூர் மாடர்ன் உடையில் அங்க அழகு தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இவரின் கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.