சூர்யாவுக்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் வாரிசு.. 22-வயது வித்தியாசத்தில் படு மோசமான ரொமான்ஸ்?

Author: Vignesh
17 January 2024, 2:04 pm

பிரபல நடிகர் சிவகுமார் அவர்களின் மூத்த மகனான சூர்யா தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். ஆரம்பித்தில் டபுள் ஹீரோ சப்ஜெக்ட், துணை ஹீரோ போன்ற திரைக்கதைகளில் நடிக்கத் தொடங்கிய இவர், நந்தா, காக்க காக்க, பிதாமகன், மௌனம் பேசியதே போன்ற படங்களின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

surya

விஜய், அஜித் இணையாக போட்டியாக வலம் வரும் சூர்யா, வாரணம் ஆயிரம், அயன், சிங்கம், மாற்றான் போன்ற திரைப்படங்கள் மூலம் செம பிரபலம் அடைந்தார். குறிப்பிட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், சமீபத்தில் நடித்து வெளியான ஜெய் பீம், சூரரை போற்று போன்ற படங்கள் இவரை இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது.

செலக்ட்டீவான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சூர்யா தற்போது, இயக்குனர் சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். கற்பனை கதைக்கொண்ட வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு வரும் இத்திரைப்படத்தில் திஷா பட்டாணி, யோகி பாபு, நடராஜன், ரெடின், கோவை சரளா, ரவிக்குமார் என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகின்றனர். பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இத்திரைப்படமானது 2024ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வாடிவாசல் என்ற படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படம் குறித்து பெரிதாக எந்த ஒரு தகவலும் வராததால் சூர்யாவின் ரசிகர்கள் சற்று சோகத்தில் இருந்து வருகின்றன. இந்நிலையில், சூர்யா ஓம் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகும், ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கதாநாயகியாக ஜான்விகபூர் நடிக்க உள்ளாராம். இவர் சூர்யாவை விட 22 வயது குறைவானவர். மேலும், இப்படத்தில் அதிகமான ரொமான்ஸ் காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

janhvi kapoor-updatenews360

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ