“என் ஆணி வேரை நெருங்கிட்டேன்” – அம்மாவின் இடத்தை எட்டிப்பிடிக்க துடிக்கும் ஜான்வி கபூர்!
Author: Rajesh24 February 2024, 4:51 pm
மறைந்த நடிகையும் பாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாருமான ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

குறுகிய காலத்திலேயே ஜான்வி கபூருக்கு பல பட வாய்ப்புகள் வருவதற்கு காரணம் அவரின் குடும்ப பின்னணி தான் முக்கியமான ஒன்றாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு படத்தில் சரியாக நடிக்க தெரியாது என்று பல விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்து வருகிறது.வழக்கம் போலவே ஸ்டார் கிட்ஸ்கள் நடிக்க தெரியாத, திறமை இல்லாமல் திரைத்துறையில் நுழைந்துவிடுகிறார்கள் என விமர்சிக்கப்படுபவர்களில் நடிகை ஜான்வி கபூரும் ஒருவர்.
இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி தொடர்ந்து படுகவர்ச்சியாக ஆடைகளை அணிந்து கிளாமராக பொதுவெளியில் சுற்றித்திரிந்து வரும் அவர் தற்போது தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

தற்போது தென்னிந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் தேவாரா படம் பற்றி பேசிய ஜான்வி கபூர், இப்படி ஒரு மிகப்பெரிய படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த படத்தின் மூலம் நான் எனது வேர்களை நெருங்கியிருக்கிறேன். தெலுங்கு படங்களில் கமிட்டான பிறகு தெலுங்கு மொழியையும் நான் கற்று வருகிறேன் என்று கூறியுள்ளார். இதில் ஒரு விஷயம் ஒத்துப்போகிறது அது என்னவென்றால், ஜான்வியின் அம்மா ஸ்ரீ தேவியும் முதன் முதலில் ஜூனியர் என்டிஆரின் தாத்தா – என்.டி ராமாராவ் உடன் தனது தென்னிந்திய அறிமுகத்தைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.