அம்மா மறைந்த வேகத்தில் அசுர வளர்ச்சி…. ஜான்வி கபூரின் மொத்த சொத்து இத்தனை கோடியா?
Author: Rajesh5 December 2023, 11:25 am
ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார்.
ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். இதில் ஜான்வி கபூரின் அம்மாவின் ஆசைப்படி சினிமாவில் அறிமுகமாகி ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.

இந்தியில் தொடர்ச்சியாக நடித்து வந்த இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படி மளமளவென வளர்ந்து வரும் ஜான்வி கபூர் கோடி கணக்கில் சொத்து சேர்த்து வைத்திருக்கிறாராம். ரூ. 66 கோடிக்கு சொத்து வைத்திருக்கும் ஜான்வி கபூர்.
ஒரு படத்திற்கு ரூ. 5 கோடி முதல் ரூ. 8 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அவர் சமூக வலைத்தளத்தில் பிராண்டுகளை விளம்பரப்படுத்த, ரூ.70-80 லட்சம் வசூலிக்கிறார். இது தவிர பிரபலமான பிராண்டுகளின் ஒப்புதல்கள் மூலம் ஆண்டுக்கு ரூ 2 கோடி முதல் 3 கோடி வரை வருமானம் வருகிறதாம்.