காலை எழுந்ததும் இத ஒரு ஸ்பூன் சாப்பிடுவேன்: ஜான்வி கபூரின் பியூட்டி சீக்ரெட் இதுதானாம்..!
Author: Rajesh2 February 2023, 7:45 pm
ஜான்வி கபூர் கடந்த 2018ம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றார்.
இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ஜான்வி கபூர் நடிப்பில் ரூகி என்னும் படம் ரிலீசானது. மேலும், தனது தந்தை போனி கபூரின் தயாரிப்பில் மிலி (Mili) படத்தில் நடித்ள்ளார்.
இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். படங்களை விட இன்ஸ்டா பக்கத்தில் ஜான்வி வெளியிடும் போட்டோக்கள் தான் அதிகம் வைரலாகிறது. அவரது எல்லைமீறிய கிளாமர் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில், ஜான்வி சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது பிட்னஸ் மற்றும் அழகின் சீக்ரெட் பற்றி பேசி இருக்கிறார். அப்போது, காலையில் எழுந்ததும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுவேன் என தனது அழகின் ரகசியத்தை கூறி இருக்கிறார்.