அம்மா மறைந்த வேகத்தில் அசுர வளர்ச்சி… சடாரென சம்பளத்தை உயர்த்திய ஜான்வி கபூர்..!
Author: Vignesh12 February 2024, 11:01 am
மறைந்த நடிகையும் பாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாருமான ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

குறுகிய காலத்திலேயே ஜான்வி கபூருக்கு பல பட வாய்ப்புகள் வருவதற்கு காரணம் அவரின் குடும்ப பின்னணி தான் முக்கியமான ஒன்றாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு படத்தில் சரியாக நடிக்க தெரியாது என்று பல விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்து வருகிறது.
வழக்கம் போலவே ஸ்டார் கிட்ஸ்கள் நடிக்க தெரியாத, திறமை இல்லாமல் திரைத்துறையில் நுழைந்துவிடுகிறார்கள் என விமர்சிக்கப்படுபவர்களில் நைட்க்கை ஜான்வி கபூரும் ஒருவர். இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி தொடர்ந்து படுகவர்ச்சியாக ஆடைகளை அணிந்து கிளாமராக பொதுவெளியில் சுற்றித்திரிந்து வருகிறார்.
இந்நிலையில், ஜூனியர் என்டிஆர் உடன் நடிக்கும் ஜான்விகபூர் ரூபாய் 5 கோடி வரை சம்பளம் வாங்கி இருந்தார். ஹிந்தியில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே நடித்த ஜான்வி தென்னிந்திய சினிமாவில் இதுவே அறிமுக திரைப்படமாகும். இப்படி ஒரு சூழ்நிலையில், முதல் படத்திற்கு 5 கோடி சம்பளம் வாங்கி இருந்தது சினிமா வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இது ஒரு பக்கம் இருக்க அடுத்ததாக ராம்சரனின் 16வது திரைப்படத்திலும் ஜான்வி கபூர் தான் ஹீரோயினாக நடிக்கப் போவதாக பேச்சுவார்த்தை எழுந்து வருகிறது. இப்படத்தில், நடிக்க ஜான்விகபூர் 10 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளாராம். அறிமுக படத்திற்கு 5 கோடி அடுத்த படத்திற்கு 10 கோடியா என தெலுங்கு திரை உலகமே ஆடிப் போய்விட்டதாம். கடந்த 20 ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் இருந்து வரும் நடிகை நயன்தாரா கூட தற்போது ரூபாய் 12 கோடி வரை தான் சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது. ஆனால், ஜான்வி கபூர் தென்னிந்திய சினிமாவிற்கு வந்த இரண்டாவது படத்திலேயே ரூ. 10 கோடி சம்பளம் கேட்டுள்ள விஷயம் திரை வட்டாரத்தில் அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.