“நான் எல்லா இடத்திலும் உன்னை தேடுறேன் மா”… ஸ்ரீதேவியை நினைத்து கலங்கிய ஜான்வி கபூரின் பதிவு…!
Author: Vignesh22 February 2023, 6:45 pm
ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.
இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார்.
ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.
ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது. இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஜான்வி கபூர் மாடர்ன் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய இவரின் கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று நடிகையும், ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நான் இன்னும் உன்னை எல்லா இடங்களிலும் தேடுகிறேன் அம்மா என்றும், நான் செய்யும் அனைத்து செயல்களிலும் உங்களை பெருமைப்படுத்தவே எண்ணுகிறேன் என்றும், நான் எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் அதன் தொடக்கமும், முடிவும் நீங்கள்தான்” என்று மறைந்த தன்னுடைய அம்மாவை நினைத்து ஜான்வி உருக்கமாக பதிவிட்டுள்ளது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ஸ்ரீதேவியின் ரசிகர்கள் ஜான்விக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.