விஜய் மகன் இயக்கும் படத்தின் CAST & CREW வெளியானது… செம வெயிட்டான கூட்டணி!
Author: Udayachandran RadhaKrishnan14 November 2024, 4:27 pm
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய் கடைசியாக தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளார். தொடர்ந்து சினிமாவுக்கு முழுக்கு போட்டு அரசியலில் இறங்குகிறார்.
இதனிடையே விஜய் மகன் ஜேசன் சஞ்சய், திரையில் நடிக்க வருவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அவர் இயக்குனராக உருவெடுத்துள்ளது கொஞ்சம் சோகமான விஷயம்தான்.
சுந்தீப் கிஷானை டிக் செய்த சஞ்சய்
தளபதி மகன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாக உள்ளது தெரிந்த விஷயம்தான். லைகா நிறுவனம் இதற்கான ஒப்பந்ததை போட்டதும் தெரிந்ததுதான். தற்போது அதில் நடிக்கும் நடிகர்கள் யார் என்ற லிஸ்ட் வெளியாகியுள்ளது.
இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய், தனது முதல் படத்தில் லீட் ரோலாக சுந்தீப் கிஷானை தேர்வு செய்துள்ளார். பாவா லட்சுமணனும் படத்தில் இணைந்துள்ளார்.
துருவ் விக்ரமுடன் இணைந்த சஞ்சய்
இதில் இன்னொரு முக்கியமான தகவல், ஜேசன் சஞ்சய் இயக்கும் இரண்டாவது படத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக களமிறங்குகிறார்.
இதையும் படியுங்க: பிரபல நடிகரால் என் சினிமா கேரியரே போச்சு…புலம்பும் வாரிசு நடிகை!
அடுத்தடுத்து பெரிய நடிகர்களை வைத்து ஜேசன் சஞ்சய் இயக்க உள்ள தகவலை பாவா லட்சுமணனே ஒரு வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
ஜேசன் சஞ்சய் தனது திரைத் தொடர்பான படிப்பை லண்டனில் 2020 முதல் 2022ஆம் ஆண்டு வரை படித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.