உன் படத்துல நடிக்க எனக்கு சான்ஸ் கொடு… கெஞ்சிய அப்பாவை கழட்டிவிட்ட சஞ்சய்!

Author: Shree
29 August 2023, 9:40 am

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளது அனைவரும் அறிந்தது. அதில் இவரது மகள் தெறி படத்தில் ஒரு சீனில் நடித்திருப்பார். மேலும், மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இவர் கடந்த ஆண்டு சினிமாதுறை சார்ந்த படிப்பை முடித்தார்.

இவர் ஏற்கனவே, தனது தந்தை விஜய்யுடன் இணைந்து வேட்டைக்காரன் படத்தில் கூட நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சஞ்சய் தற்போது இயக்குனராக களமிறங்கியுள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்கும் ஒப்பந்தத்தில் சஞ்சய் கையெழுத்திட்ட போட்டோக்களை லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

விஜய் தன் மகனை ஹீரோவாக நடிக்க வைக்க தான் ஆசைபட்டாராம். அதற்காக ஷங்கர் , முருகதாஸ், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட மிகப்பெரிய வெற்றி இயக்குனர்களிடம் பேசி ஒப்புதல் வாங்கிவிட்டாராம். ஆனால், மகன் சஞ்சய்யோ தனக்கு நடிப்பதில் கொஞ்சம் கூட ஆர்வமே இல்லை. இயக்குனராக தான் ஆவேன் என விடாப்பிடியாக நின்றான்.

இதனால் விஜய் சரி… நீ படம் தானே இயக்கனும் கதை தயார் பண்ணிட்டு சொல்லு நானே அந்த பட்டதில் ஹீரோவாக நடிக்கிறேன் என கூறினாராம். இதனால் கடுப்பான சஞ்சய்… என்னுடைய கதைக்கு யார் பொருத்தமாக இருப்பார்கள். யாரை தேர்வு செய்யலாம் என எல்லாவற்றையும் நானே பார்த்துக்கொள்கிறேன் என கூறினாராம்.

சரி…. அட்லீஸ்ட் ஒரு கெஸ்ட் ரோல் ஆவது கொடுப்பா. நான் நடித்தால் படம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகும். உன்னுடையே ஆரம்பமே சிறந்ததாக இருக்கும். அதே நேரத்தில் எனக்கும் மகனின் இயக்கத்தில் நடிக்கவேண்டும் என ஆசை இருக்காதா? என சொல்லி வாய்ப்பு கேட்டாராம் விஜய். அதற்கு சஞ்சய்… அப்பா ப்ளீஸ்பா என்னை விடுங்க…. நீங்க உங்க லைன்ல போங்க, நான் என் லைன்ல போறேன். ஒரு அப்பாவா நீங்க எனக்கு சப்போர்ட்டா இருந்தா மட்டும் போதும் என கூறி பேச்சை நிப்பாட்டிகொண்டாராம். அதன் பின்னர் தான் மகனுக்கு லைக்கா நிறுவனத்திடம் சான்ஸ் வாங்கி கொடுத்துள்ளார் விஜய் என செய்திகள் கூறுகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ