போதும் போதும் லிஸ்ட் பெருசா போகுது… விஜய் மகன் படத்தில் இத்தனை வாரிசு குட்டிகளா?

Author:
1 August 2024, 11:26 am

தமிழ் சினிமாவில் தற்போதைய டாப் நடிகராக இருந்து வரும் விஜய்யின் மகன் சஞ்சய் வெளிநாட்டிற்கு சென்று சினிமா மேக்கிங் படிப்பை படித்து முடித்துவிட்டு படம் இயக்க தயாராகி இருக்கிறார். இதற்காக சில மாதங்களுக்கு முன்னர் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்துடன் சேஜன் சஞ்சய் ஒரு படத்தை இயக்கப்போவதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் செய்தி வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்திருக்கிறது.

அது அடுத்து இப்படத்தை குறித்த எந்தவிதமான அப்டேட்டும் வெளியாகவில்லை. அதன்பின் சில மாதங்கள் கழித்து ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் இந்த படத்தில் நடிகர் கவின் தான் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என தகவல் வெளியானது. இதைப் பார்த்து கவின் இடம் கேட்டதற்கு வெறும் பேச்சுவார்த்தை மட்டும் தான் நடந்தது. ஆனால் அது உறுதியாகவில்லை என கூறி இருந்தார்.

அதன் பின் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தான் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவதாக செய்தி வெளியானது. ஆனால் துருவ் விக்ரம் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பே இல்லை என சினிமா வட்டாரம் கூறுகிறது . காரணம் துருவ் விக்ரம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அது மட்டும் இல்லாம விக்ரம் தன்னுடைய மகனை மிகப்பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க வைத்து அவரை நட்சத்திர ஹீரோவாக மாற்ற வேண்டும் என என்ற முனைப்பில் இருக்கும் சமயத்தில் ஜேசன் சஞ்சய் போன்ற புதுமுக இயக்குனர்களின் இயக்கத்தில் நிச்சயம் நடிக்க விடமாட்டார் விக்ரம் என சினிமா வட்டாரம் கூறுகிறது .

இப்படி இருக்கும் சமயத்தில் அடுத்ததாக ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்கப் போகும் அந்த ஹீரோ யார்? என்ற கேள்விதான் இப்போது எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது. அது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் யார் ஹீரோவாக நடித்தாலும் அவர்களுக்கு ஜோடியாக நிச்சயம் அதிதி சங்கர்தான் நடிப்பார் என ஜேசன் சஞ்சய் உறுதி செய்து விட்டாராம்.

மேலும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமானின் மகனான ஏ ஆர் அமீர்தான். இசையமைக்க போவதாக தகவல்கள் கூறுகிறது. இந்த விஷயம் நெட்டிசன்ஸ் கையில் சிக்க ஜேசன் சஞ்சய் இன்னும் எத்தனை வாரிசு குட்டிகளை இந்த படத்தில் இறக்கப்போகிறாரோ என்ன கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!