விஜய் மகன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் சூரி?.. கதையை கேட்டவுடன் ஜெர்க் கொடுத்த நடிகர்..!

Author: Vignesh
9 August 2024, 2:17 pm

தளபதி விஜயின் மகன் ஜோசன் சஞ்சய் தனது முதல் படத்தின் கதையை சூரியிடம் சொன்னதாகவும், அந்த கதையை கேட்டு சூரி சொன்ன பதில் அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்ததாகவும் செய்திகள் தற்போது இணையதளத்தில் வெளியாகி வருகிறது.

அதாவது, தளபதி விஜயின் மகன் ஜோசன் சஞ்சய் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படத்தை இயக்க இருந்த நிலையில், இந்த படத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஹீரோ கேரக்டரில் நடிக்க விஜய் சேதுபதி, கவின் உட்பட ஒரு சில நடிகர்களை ஜோசன் சஞ்சய் அனுகி கதை சொன்னதாகவும். ஆனால், இன்னும் ஹீரோ முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக உயர்ந்த சூரியிடம் ஜோசன் தந்தை இந்த படத்தின் கதையை சொன்னதாகவும், கதையை பொறுமையாக ஒரு மணி நேரத்திற்கு மேல் கேட்ட சூரி இந்த கதை மாஸ் நடிகர்களுக்கான கதை என்னைப் போன்ற நடிகர்களுக்கு இது செட் ஆகாது என்று அவர் நடிக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் நாயகன் யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!