அப்பாவே வேண்டாம்… முதல் படத்தின் ஹீரோவை ரவுண்ட் செய்த சஞ்சய் – யாருன்னு தெரிஞ்சா மெர்சல் ஆகிடுவீங்க!
Author: Shree30 August 2023, 2:52 pm
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சினிமா மேக்கிங் படைப்பை முடித்துவிட்டு இயக்குனராக வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்து வந்தார். அதற்கான சரியான நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்த அவர் நேற்று லைக்கா நிறுவனம் தறிக்கும் அடுத்த படத்தில் இயக்குனராக ஒப்பந்தமாகியுள்ளார். அதன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகியது.
இவர் ஏற்கனவே, தனது தந்தை விஜய்யுடன் இணைந்து வேட்டைக்காரன் படத்தில் கூட நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு தன் மகன் ஹீரோவாக வேண்டும் என்று தான் ஆசைபட்டாராம். அதற்காக ஷங்கர், முருகதாஸ், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட மிகப்பெரிய வெற்றி இயக்குனர்களிடம் பேசி ஒப்புதல் வாங்கிவிட்டாராம். ஆனால், மகன் சஞ்சய்யோ தனக்கு நடிப்பதில் கொஞ்சம் கூட ஆர்வமே இல்லை. இயக்குனராக தான் ஆவேன் என விடாப்பிடியாக நின்றார்.
இதனால் விஜய் சரி… நீ படம் தானே இயக்கனும் கதை தயார் பண்ணிட்டு சொல்லு நானே அந்த பட்டதில் ஹீரோவாக நடிக்கிறேன் என கூறினாராம். இதனால் கடுப்பான சஞ்சய்… என்னுடைய கதைக்கு யார் பொருத்தமாக இருப்பார்கள். யாரை தேர்வு செய்யலாம் என எல்லாவற்றையும் நானே பார்த்துக்கொள்கிறேன் என கூறினாராம். சரி…. அட்லீஸ்ட் ஒரு கெஸ்ட் ரோல் ஆவது கொடுப்பா. நான் நடித்தால் படம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகும். உன்னுடையே ஆரம்பமே சிறந்ததாக இருக்கும். அதே நேரத்தில் எனக்கும் மகனின் இயக்கத்தில் நடிக்கவேண்டும் என ஆசை இருக்காதா? என சொல்லி வாய்ப்பு கேட்டாராம் விஜய்.
அதற்கு சஞ்சய்… அப்பா ப்ளீஸ்பா என்னை விடுங்க…. நீங்க உங்க லைன்ல போங்க, நான் என் லைன்ல போறேன். ஒரு அப்பாவா நீங்க எனக்கு சப்போர்ட்டா இருந்தா மட்டும் போதும் என கூறி பேச்சை நிப்பாட்டிகொண்டாராம். அதன் பின்னர் தான் மகனுக்கு லைக்கா நிறுவனத்திடம் இயக்குனராக சான்ஸ் வாங்கி கொடுத்துள்ளார் விஜய்.
இந்நிலையில் ஜேசன் சஞ்சய் தன்னுடைய முதல் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை ஹீரோவாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம். அப்பா ஸ்டார் நடிகராக இருந்தாலும் நல்ல திறமையான ஹீரோவை தேர்வு செய்துள்ள சஞ்சய் நிச்சயம் எதிர்காலத்தில் மிகப்பெரிய இயக்குனர் ஆகுவார் என பலர் கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.