என்னப்பா இந்த அட்லீ இன்னும் திருந்தவே இல்லையா.. ஜவான் படம் குறித்து வறுத்தெடுக்கும் நெடிசன்கள்..!

Author: Vignesh
10 July 2023, 1:39 pm

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் அட்லி. இவர் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் உள்ள படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், நயன் தாரா நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். சில ஆண்டுகளாக ஷாருக்கானின் படங்கள் வெளியாகாத நிலையில், பதான் மற்றும் ஜவான் ஆகிய படங்கள் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Priya-Atlee-updatenews360

மிகப்பெரிய பட்ஜெட்டில் ஜவான் படம் உருவாகி வரும் நிலையில், தொடர்ந்து அட்லியின் படங்கள் மீது வைக்கப்படும் அதே குற்றச்சாட்டு இப்படத்திலும் இடம்பிடித்துள்ளது.

சுமார் மூன்று ஆண்டுகளாக ஜவான் படம் குறித்து சில தடைகளை சந்தித்து வந்த போதும் செப்டம்பர் 7ஆம் தேதி இந்த படம் திரையில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ஜவான் படத்தின் Prevue வீடியோ ஒன்று பட குழுவினர் வெளியிட்டனர்.

jawan-UpdateNews360

ஆக்ஷன் காட்சிகளாக வெளியான அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் கருத்துக்களை கூறிவரும் நிலையில், பாராட்டை பெற்றாலும் எப்போதும் போலவே அட்லீ காப்பியடிக்கிறார் என்று விமர்சனத்தையும், அந்த படம் பெற்றிருக்கிறது. சில கதாபாத்திரம் மற்றும் காட்சிகள் மற்ற படத்தினை வைத்து அட்லி இணையத்தில் புகைப்படங்கள் மூலமாக வெளியிட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • Tamil actress Rambha comeback ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை ரம்பா…ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ்..!
  • Views: - 497

    0

    0