அட்லீனாலே காப்பிதானா?.. என்மேல கேஸ் போட்ட யாரும் ஜெயிக்கல – மார்தட்டிக் கொள்ளும் அட்லீ..!

Author: Vignesh
8 September 2023, 4:00 pm

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லீ. இவர் ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் கொடுக்க இளம் வெற்றி இயக்குனராக வலம் வந்தார்.

அதை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர் என்ற இடத்தை பிடித்தார். தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

atlee dp

இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில், அட்லீ இயக்கிய அத்தனை படமும் வேறு படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என ரசிகர்களால் அப்பட்டமாக விமர்சிக்கப்பட்டு வந்தது.

இயக்குனர் அட்லீயிடம் கதை திருட்டு சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்த அவர், கதை திருட்டு தொடர்பாக என்னை நீதிமன்றம் வரை கொண்டு சென்றனர். ஆனால், அனைத்து வழக்குகளிலும் இருந்து நான் வெற்றிபெற்றேன். ஒருவர் மெர்சல் படம் மூன்று முகம் படத்தின் காப்பி என சொன்னார்.

இதையடுத்து, என் மீது வழக்கு போட்ட தயாரிப்பாளருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடைசியில் அவர்தான் அபராதம் கட்டினார். அதேபோல், மற்றொரு வளரும் இயக்குனர் ஒருவர் பிகில் கதை அவருடையது என கூறி வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, இயக்குனர் சங்கம் அது ஒரிஜினல் ஸ்கிரிப்ட் தான் என சான்றிதழ் அளித்தது அதை வைத்து அந்த வழக்கிலும் வெற்றி பெற்றேன் என கூலாக பதில் அளித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 454

    0

    0