முத்தக் காட்சியுடன் வெளிவந்த ஹையோடா.. நயன்தாரா – ஷாருக்கான் ரொமான்டிக் நடிப்பில் ஜவான் பாடல்..!
Author: Vignesh14 August 2023, 6:38 pm
தமிழ் சினிமாவின் இளம் ஹிட் இயக்குனரான அட்லீ ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் ஹிட் திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றார். தற்போது பாலிவுட் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை வைத்து ஜாவான் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முக்கால்வாசி முடிந்துவிட்டது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் நடிக்க அட்லீ அழைத்திருந்தார். ஆனால் அவர் லியோ படத்தில் பிசியாக இருப்பதால் அவருக்கு பதிலாக நடிகர் அல்லு அர்ஜுன் அந்த ரோலில் நடிக்கிறார்.
இப்படத்தின் கடைசிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அண்மையில் ஜவான் திரைப்படத்தின் முதல் பாடலான “வந்த இடம்” என்கிற பாடலை படக்குழு வெளியிட்டது. அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலுக்கு ஷாருக்கானின் நடனம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
இதனிடையே, பாலிவுட்டில் வெற்றி கொடியை பறக்க விட வேண்டும் என்பதற்காக நயன்தாரா இப்படி உருகி உருகி ரொமான்ஸ் செய்திருப்பது ரசிகர்களை ஆச்சரியமடைய வைத்திருக்கிறது. அந்த வகையில் விக்கி பயந்ததில் தப்பே இல்லை என்றும் இதுதான் நயன்தாராவின் புது அவதாரம் என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
இந்நிலையில், அனிருத் இசையில் உருவாகி வரும் ஜவான் படத்திலிருந்து ஏற்கனவே ஜவான் டைட்டில் டார்க் வெளிவந்து ஹிட்டான நிலையில், தற்போது ’ஹையோடா’ எனும் இரண்டாவது பாடல் தமிழில் வெளிவந்துள்ளது. இந்த பாடலில் ஷாருக்கான் மற்றும் நயன்தாராவின் ரொமான்டிக் நடனம் பட்டையை கிளப்புகிறது.