பிரம்மாண்டமே பிரம்மித்துபோகும்… ஜவான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எங்கு, எப்போது தெரியுமா?

Author: Shree
29 August 2023, 7:13 pm

தமிழ் சினிமாவின் இளம் ஹிட் இயக்குனரான அட்லீ ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் ஹிட் திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றார். தற்போது பாலிவுட் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை வைத்து ஜாவான் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நாளை இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாம். சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள கல்லூரி ஆடிட்டோரியத்தில்நடைபெறப்போகும் இவ்விழாவில்,

படக்குழுவினர், கல்லூரி மாணவர்கள், ரசிகர் மன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் நடிகர் சங்கத்தினர் உள்ளிட்ட லட்ச கணக்கானோர் பங்கேற்கலாம் என யூகிக்க முடிகிறது. மாலை 3 மணிக்கு நிகழ்ச்சி தொடங்க உள்ளது. இதில் நயன்தாரா பங்கேற்க உள்ளார். பல வருடத்திற்கு பிறகு அவர் படத்தின் ப்ரோமோஷனில் கலந்துக்கொள்வது ஜவான் படத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஷாருக்கான் தனி விமானத்தின் மூலம் சென்னை வந்திறங்குவார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி