ஷாருக்கானின் பிறந்தநாள் ட்ரீட்… அட்லீ மனம் குளிரச்செய்த தரமான பரிசு!

Author: Shree
2 November 2023, 12:06 pm

தமிழ் சினிமாவின் இளம் ஹிட் இயக்குனரான அட்லீ ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் ஹிட் திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றார். அதையடுத்து கடைசியாக பாலிவுட் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை வைத்து ஜாவான் படத்தை இயக்கினார்.

jawan

இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்தார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி வெளியான இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் ரிலீஸ் ஆகியது இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்திருந்தார்.பிரமாண்டமாக உருவாகிய ஜவான் படம் உலக அளவில் நல்ல கலெக்ஷனை அள்ளியுள்ளது.

சுமார் ரூ. 300 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் இதுவரை ரூ. 1146 கோடிக்கு வசூல் ஈட்டியுள்ளது. இது அட்லீயின் கெரியரில் மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ஷாருக்கான். அவரது பிறந்தநாள் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு ஜவான் படம் OTT தலத்தில் இன்று ரிலீஸ் செய்துள்ளனர். இதனால் இன்னும் சில நாட்களுக்கு ஜவான் படத்திற்கு நல்ல மவுஸ் கிடைக்கும். இதன் மூலம் அட்லீயும் குதூகலத்தில் இருப்பார் என பேசப்பட்டு வருகிறது.

  • நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!
  • Copyright © 2025 Updatenews360
    Close menu