ஷாருக்கான் உடன் ஆட்டம் போட்ட அட்லீ… ஜவான் பாடல் மேக்கிங் வீடியோ!

Author: Shree
11 August 2023, 3:32 pm

தமிழ் சினிமாவின் இளம் ஹிட் இயக்குனரான அட்லீ ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் ஹிட் திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றார். தற்போது பாலிவுட் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை வைத்து ஜாவான் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முக்கால்வாசி முடிந்துவிட்டது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் நடிக்க அட்லீ அழைத்திருந்தார். ஆனால் அவர் லியோ படத்தில் பிசியாக இருப்பதால் அவருக்கு பதிலாக நடிகர் அல்லு அர்ஜுன் அந்த ரோலில் நடிக்கிறார்.

இப்படத்தின் கடைசிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அண்மையில் ஜவான் திரைப்படத்தின் முதல் பாடலான “வந்த இடம்” என்கிற பாடலை படக்குழு வெளியிட்டது. அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலுக்கு ஷாருக்கானின் நடனம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில் அட்லீ ஷாருக்கான் உடன் சேர்ந்து நடனமாடி அனைவரையும் கவர்ந்திழுத்துவிட்டார்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!