அனிருத் இசையில் குத்தாட்டம் போட்ட ஷாருக்கான்… வேறமாறி வெறித்தனம் ஜவான் பாடல் வீடியோ!
Author: Shree31 July 2023, 3:57 pm
தமிழ் சினிமாவின் இளம் ஹிட் இயக்குனரான அட்லீ ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் ஹிட் திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றார். தற்போது பாலிவுட் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை வைத்து ஜாவான் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முக்கால்வாசி முடிந்துவிட்டது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் நடிக்க அட்லீ அழைத்திருந்தார். ஆனால் அவர் லியோ படத்தில் பிசியாக இருப்பதால் அவருக்கு பதிலாக நடிகர் அல்லு அர்ஜுன் அந்த ரோலில் நடிக்கிறார்.
இப்படத்தின் கடைசிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஜவான் திரைப்படத்தின் முதல் பாடலான “வந்த இடம்” என்கிற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலுக்கு ஷாருக்கானின் நடனம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது. இதோ அந்த பாடல் வீடியோ.