ஐஸ்வர்யா ராய் என் பொண்ணு இல்ல.. நான் எதுக்கு அப்படி நடந்துக்கணும்.. மாமியாரின் வைரல் வீடியோ..!

Author: Vignesh
14 August 2024, 6:05 pm

ஐஸ்வர்யாராய்க்கும் அவரது மாமியார் ஜெயா பச்சனுக்கும் ஆகவே ஆகாது என பல காலமாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்யும் முடிவை ஐஸ்வர்யா ராய் எடுக்க முக்கிய காரணமே மாமியார் ஜெயா பச்சன் தான் என பேச்சு அடிபட்டு இருக்கிறது.

இந்த நேரத்தில், ஐஸ்வர்யா ராய் என் மகள் இல்லை மருமகள் என முன்பு ஜெயா பச்சன் கூறிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதாவது, ஜெயா பச்சன் ஒன்றும் ஐஸ்வர்யா ராய் குறித்து தவறாக ஏதும் சொல்லவில்லை. நீங்கள் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டான அம்மா, மேலும் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டான மாமியாரா என கேள்வி கேட்டதற்கு மகளுக்கும் மருமகளுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.

பெற்றோருக்கு மதிப்பு கொடுக்கணும் என நினைக்க மாட்டோம். ஆனால், மாமியார் மாமனார் விஷயத்தில் அப்படி செய்ய முடியாது. நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டான அம்மா ஆனால், ஐஸ்வர்யா ராய் என் மகள் அல்ல மருமகள். அதனால், நான் ஏன் அவரிடம் ஸ்ட்ரிக்ட்டா இருக்க வேண்டும். அவங்க அம்மா ஸ்ட்ரிக்ட்டா இருந்திருப்பார் என நினைக்கிறேன் என்று பேசியுள்ளார். ஜெயா பச்சன் எனவோ நல்லவிதமாக தான் பேசுகிறார்.

ஆனால், அந்த பேட்டியில் ஜெயா சொன்னது நம்பும்படி இல்லை திருமணத்திலிருந்து மருமகளை தன் கண் பார்வையிலே வைத்திருக்கிறார். இந்த காலத்தில் யார் மாமியார் மாமனாருடன் வசிக்கிறார்கள். எது எப்படியோ ஐஸ்வர்யா ராய் தன் கணவருடன் ஒற்றுமையாக இருந்தால் போதும் என்கிறார்கள் ரசிகர்கள்.

  • Just marry Simbu.. Fans Request to Trisha நீங்க பேசாம சிம்புவை கல்யாணம் பண்ணிக்கோங்க… திரிஷாவுக்கு வந்த திடீர் கோரிக்கை!