‘பெண்ணின் மனதை தொட்டு’ படத்தில் நடித்த நடிகையா இது..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

Author: Vignesh
19 January 2023, 3:00 pm

தமிழ்திரையுலகில் மக்கள் மத்தியில் பிரபலமாக சில வருடங்கள் கூட ஆகும். அதிலும் குறிப்பாக மக்களை தங்களை நடிப்பின் மூலம் கவர்வது என்பது சற்று இயலாத ஒன்று. அதேபோல் தன் முதல் திரைப்படமாக இருந்தாலும் அந்த கேரக்டர் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்து பின்னர் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் நடிகைகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

Jaya Seal - updatenews360

அந்த வகையில், தமிழில் இப்போது நடிகைகளின் படை எடுப்பு அதிகப்படியாக உள்ளது. இவர் முதல் திரைப்படம் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் பிரபுதேவா உடன் ஜோடி சேர்ந்த இவர் ”கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா” பாடல் மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்தார். தற்போது வரை அந்த பாடல் பலபேரின் ஃபேவரட் லிஸ்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Jaya Seal - updatenews360

அதன் பிறகு விக்ரமுடன் சாமுராய் திரைப்படத்தில் ஜோடியானார். அதன்பின் இவருக்கு பல தமிழ் திரைப்பட வாய்ப்புகள் வந்தபோதும் ஹிந்தி, தெலுங்கு திரைப்படங்களுக்கு சென்று உள்ளார். அதன்பின் தபேலா கலைஞரான பிக்ரம் கோசை கல்யாணம் செய்துகொண்டார்.

Jaya Seal - updatenews360

அதன் பின்னர் ஆங்கில திரைப்படம் மட்டும் சில பெங்காலி திரைப்படங்களில் நடித்து வந்த ஜெயா சீல். தற்போது இவரது குழந்தைகளை கவனித்துக் கொள்வதே ஒரு வேலையாக வைத்திருக்கின்றாராம். இந்நிலையில், அவரின் குடும்ப போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Jaya Seal - updatenews360
  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 779

    3

    0