தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் படங்களில் நடிப்பதோடு சரி எந்த பொது நிகழ்ச்சிக்கோ, திரைப்படம் சார்ந்த விழாக்களிலோ பங்கேற்கவே மாட்டார். இதனை அவர் தனது கொள்கையாகவே பல வருடங்களாக செய்து வருகிறார். இதனை சிலர் பாராட்டினாலும் பெருவாரியான மக்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், விடாமுயற்சி படத்தில் பிசியாக நடித்து வரும் அஜித் குமார் அதற்கு அடுத்தபடியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், விஜயின் அரசியல் வருகை ஒரு பக்கம் வைரலாகி வரும் நிலையில், அஜித்தின் அரசியல் குறித்து தகவல் ஒன்று தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் பேட்டியளித்த பத்திரிக்கையாளர் வி கே சுந்தர் இதைப்பற்றி பேசியுள்ளார். அதாவது, ஜெயலலிதா அவர்களுக்கு அஜீத்தை மிகவும் பிடிக்கும் அஜித்தை எப்படியாவது அரசியலுக்குள் வர வைக்க வேண்டும் என தீவிரமாக இருந்தாராம். தனக்கு பின் தன்னுடைய இடத்தில் அஜித்தான் இருக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் ஆசையாக இருந்துள்ளது.
ஆனால், அது நடக்காமல் போய்விட்டது. ஜெயலலிதா எப்படி அஜித் மீது இவ்வளவு அளவு கடந்த அன்பை வைத்துள்ளாரே, அதே போல் அஜித்திற்கு ஜெயலலிதா மீது மிகப்பெரிய அன்பு இருக்கிறது. ஜெயலலிதா இறந்த செய்தியை கேட்டு வெளிநாட்டில் இருந்த அஜித் இரண்டு Chartered விமானத்தை பிடித்து இங்கு வந்து ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
ஒருவேளை ஜெயலலிதா ஆசைப்பட்டது போல் அன்றே அஜித் அரசியலுக்குள் வந்திருந்தால், இன்று அரசியலில் களம் இறங்கி இருக்கும் நடிகர் விஜய் விட அஜித்திற்கு பிரகாச பிரகாசமான அரசியல் வாய்ப்பு கிடைத்திருக்கும் என கூறியுள்ளார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.