பிரபல நடிகரின் விவாகரத்துக்கு காரணமே குஷ்பு தான்.. கோபத்தில் குடும்பம்..!
Author: Vignesh10 July 2024, 5:04 pm
தமிழ் சினிமாவில் சமீப காலமாக பிரபலங்களின் விவாகரத்து செய்திகள் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. எந்த நாளில் எந்த பிரபலங்கள் விவாகரத்தை அறிவிப்பார்கள் என்பது கூட தெரியவில்லை. அந்த அளவுக்கு விவாகரத்து லிஸ்ட் பெருசாகிக் கொண்டே உள்ளது. இந்த லிஸ்டில் புதிதாக இணைந்துள்ள ஜெயம் ரவி ஆரத்தி தம்பதியினரை குறித்து சில பத்திரிகைகளில் ஜெயம் ரவி ஆரத்திக்கு இடையே, கருத்து மோதல் ஏற்பட்டது விரைவில் விவாகரத்து தொடர்பான தகவலை அறிவிப்பார்கள் என்று செய்திகள் வெளியாகி வந்தன.
சிலர் இதுபோன்ற செய்திகள் உண்மை இல்லை என்றும், இது வெறும் வதந்தியே என்றும் சொல்லி வந்தனர். மேலும், ஜெயம் ரவியின் மனைவி ஆரத்தி கணவருடன் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார்.
இவர்களது விவாகரத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய காரணம் ஒன்றினை பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.
அதாவது, ஜெயம் ரவியின் மனைவி ஆரத்தியின் அம்மா சுஜாதாவுடன் குஷ்பூ நெருக்கமாக இருக்கக்கூடியவர். ஜெயம் ரவி, ஆரத்தி இடையே ஏற்பட்ட பிரிவுக்கு முக்கிய காரணமாக குஷ்பூ இருந்து வருகிறார். ஜெயம் ரவியின் அப்பாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. குஷ்புவுக்கும் ஜெயம் ரவி மாமியாருக்கும் நட்பு இருப்பதால், பார்ட்டியில் கலந்து கொண்டு இதுகுறித்து, பேசி முடிவு எடுத்ததாக சபிதா ஜோசப் தற்போது தெரிவித்துள்ளார்.